என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் மோட்டார் வாகன அலுவலர்கள் நடத்திய சோதனையில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்கான்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவின் பேரில் போக்கு வரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் குறிப்பாக தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்கான்) பயன்படுத்தபடுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் மோட்டார் வாகன அலுவலர்கள் திடீர் சோதனைஇரண்டு வார காலமாக மேற்கொள்ள ப்பட்டது.
இச்சோதனையில் 20 தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருமருகல் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா நேற்று முதல் இரவு நடைபெற்றது. இதில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி வாகனங்களில் வீதி உலா ரதக்காவடி உடன் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
வேதாரண்யத்தில் மின்கசிவால் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வண்டுவஞ்சேரி ஊராட்சி வெள்ளி கிடங்கு பகுதியில் வசிப்பவர் ரத்தினசாமி (63) நேற்று இவர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின் கசிவின் காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
மேலும் வாய்மேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் வந்த வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் வீட்டில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதில் வீட்டிலுள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது வீட்டின் சேத மதிப்பு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சம்பவ இடத்திற்குவந்த கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார், ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் நிதியுதவியும் வழங்கினர்.
திருமருகல் அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கீழப்பூதனூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.முகாமில் திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு கலைச்செல்வன் முன்னிலை வகித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
விவசாயிகளுக்கு மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி எடுத்து ஆய்வகத்தில் ஒப்படைக்கும் செயல்முறை குறித்தும் மண் மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் சுதா எடுத்துரைத்தார்.
சகோதரத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி மற்றும் கூட்டுறவு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டு விரைவாக எடுத்துரைத்தனர்.இந்த முகாமில் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பல், ஏர்வாடி, பனங்குடி மற்றும் போலகம் கிராமங்களில் முகாம்கள் நடைபெற்றது.
வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே புஷ்பவனம், நாலுவேதபதி உட்பட பல்வேறு மீனவ கிராமங்களில் நாகை இந்திய கடற்படை பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நாகை முகாம் லெப்டினட் கமாண்டர் கர்மீந்தர் சிங் தலைமையில் நடந்தது.
கூட்டங்களில் மீனவ பிரதிநிதிகளிடம் பேசிய கடற்படை அதிகாரிகள் கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணை போகாமல் குற்றங்கள் மற்றும் கஞ்சா, போதை பொருள்கள் கடத்தல், அந்நியர்கள், படகுகள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீஸ் மற்றும் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும், கரை ஒதுங்கும் பொருள்கள், சந்தேகநபர்கள் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்தும் வேண்டுகோள் விடுத்தும் பேசினர்.
கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பா–ர்வையாளர் விக்னேஷ், கடற்படை வீரர்கள் ராஜேஷ், நவீன், அலோக் குமார் உட்பட அதிகாரிகளும் ரமேஷ், தினேஷ், முருகானந்தம் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார் தலைமையிலான மீனவ ர்களும் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம் பகுதியில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் நேரடி செயல் விளக்கமளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், தாமரைபுலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலில் தென்னை மரங்களில் அதிக அளவு வெள்ளை ஈ (ருகோஸ் சுருள் நோய்) தாக்குதல் காணப்படுகிறது. இந்த நோய் தென்னை வாழை, மா, முந்திரி, கொய்யா, சீதாப்பழம் ஆகிய சாகுபடியிலும் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த நாலுவேதபதியில் வேளாண்மைதுறையினர் நேரடி செயல்விளக்கம் அளித்தனர் பின்பு விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் கூறிய ஆலோசனையில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மஞ்சள் நிறம் வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உடையதால் மஞ்சள் நிறத்தில் பாலீத்தின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளை ஐந்தடி நீளம் ஒன்னரை அடி அகலத்தில் ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம், தென்னை மரங்களில் நான்கடி உயரத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அதில் வெள்ளை கிரீஸ் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்கலாம்
இதில் வெள்ளை ஈ ஒட்டிக்கொள்ளும் மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிர, செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம் பூச்சிதாக்கப்பட்ட தென்னை மரங்களிலே மேல் தலிபான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்
தென்னையில் மஞ்சள் நிற பூக்கள் தரும் சனப்பு செனடுப்பூ காராமணி போன்ற பயிர்களை தென்னையில் ஊடுபயிராக விதைப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு கண்ணாடி இறக்கைபூச்சி என்கார்னியா ஒட்டுண்ணிகளை பெருக்கத்தை அதிகரித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதன் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிர்ப்பூக்கிகள் வளர்ப்பதற்கு உரிய சூழலை மேம்படுத்த சாலச் சிறந்ததாகும்
எனவே தென்னை விவசாயிகள் இந்த ஆலோசனையை பின்பற்றி வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்திடலாம் என வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார் உடன் வேளாண்மை அலுவலர்கள் நவீன், யோகேஷ் உதவி வேளாண்மை அலுவலர் கனிமொழி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தியில் அமைந்துள்ள ஆனந்த காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி செட்டியார்குத்தகை ஆனந்த காமாட்சி அம்மன் முனிஸ்வார ஆலய சித்திரை பெருவிழாகடந்த 3 ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது
நாள்தோறும் சுவாமி சிறப்பு அபிஷேகம் வீதியுலா நடைபெற்றது நேற்று மாலை மஞ்சள் விளையாட்டு நடைபெற்றது பின்பு அம்பாள் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மாவிளக்கு போடுதல் காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்தி கடனை செலுத்தினார் இரவு வணவேடிக்கையும் அன்னதானமும் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு இனிப்பு கஞ்சி வழங்கபட்டது விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கணேஷ், பொன்னுதுரை, மனோகரன், திருநாவுக்காரத மற்றும் மருளாளிகள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் எச்சரிக்கையாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது.
இதனால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் எச்சரிக்கையாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது.
இதனால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
திருமருகலில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். இதற்கு மகளிரணி மாநில குழு துணைத்தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் அற்புதராஜ் ரூஸ்வல்ட், வட்டத்துணை தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசன், ஜோதிலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொ ண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுவுடையா நன்றி கூறினார்.
நாகை அரசு கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் மாணவ-மாணவி களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாகை அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து விடிய விடிய காவல் காத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரை டவுசர் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் புகுந்தார்.
இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து விசாரித்தனர். இதில் அவர் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வேளா ங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், வினோத்ராஜ் தப்ப விடாமல் விடிய விடிய மக்களே காவல் காத்தனர். இன்று அவரை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச் சங்க மாநாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதா ரண்யத்தில் நாகை மாவட்ட பாரதி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் 14வது மாநாடு மாவட்ட தலைவர் அமரேசன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவர் எஸ். எஸ்.தென்னரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நல அலுவலகம் தனிக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும், பச்சிளம் குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடமாடும் சிகிச்சை மைய வாகனம் கிராமங்களுக்குச் சென்று சேவையை தொடங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.






