என் மலர்
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோவிலில் கிருத்திகை வழிபாடு நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புஷ்பபல்லக்கு வீதியுலா நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறைற மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ்பெற்றற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் கிருத்திகை வழிபாடு மண்டலாபிஷேக கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமாரசாமிக்கு கார்த்திகை மண்டபத்தில் அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு மகா அபிஷேகமும், தொடர்ந்து சண்முகார்ச்சனை மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து, கற்பக விநாயகர், சுவாமி -அம்பாள், செல்வமுத்துக்குமாரசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து நான்கு வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
திருநாங்கூரில் 12 சிவபெருமான் அம்பாளுடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருநாங்கூர் கிராமம். சைவ, வைணவ கோயில்கள் அதிகம் கொண்டுள்ள ஆன்மிக தலமான இவ்வூரை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோயில்களும், 12 பிரசித்திபெற்ற சிவாலயங்க ளும் உள்ளன.
திருநாங்கூரில் மதங்கா ஸ்ரமத்தில் மதங்க ரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்புசிவபெரு மானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்ற தாகவும், அதைத்தொடர்ந்து 12சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெற்றதாகவும் வரலாற்று குறிப்புகள் உணர்த்துகி ன்றன.130ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இவ்விழா கடந்த 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் பெரும் முயற்சியால் நடைபெற்றுவருகிறது.
தொடர்ந்து 4 ஆண்டுகள் நடந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகள் மீண்டும் தடைப்பட்டதால் பக்தர்கள் மனம் வருந்தி னர். இதனிடையே நிகழா ண்டு இவ்விழா மீண்டும் நடைபெற்றது. திருநாங்கூர் ஸ்அஞ்சனாக சமேத மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுபள்ளி ரீ அகிலாண்டேசுவரி சமேத ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் யோகாம்பிகை சமேத யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் சொர்ணாம்பிகை சமேத ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் சந்திராசு அம்பாள் சமேத அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு நற்றுணைநாயகி சமேத நாகநாதசுவாமி, திருநாங்கூர் நம்பிரியான் சமேத நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் காமாட்சி சமேத கைலாசநாதசுவாமி, திருமேனிக்கூடம் சௌந்தரநாயகி சமேத சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம் அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை சுந்தரநாயகி சமேத கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான்கந்து திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர்சுவாமி கோயிலில் எழுந்தருளினர்.
சிறப்பு வழிபாடுகளு க்குப்பிறகு 12 சுவாமி-அம்பாள்களும் ரிஷப வாக னங்களில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் வேதபாராயணம் திருமுறைபாராயணம், கைலாயவாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு இன்று அதிகாலை வரை நடைபெற்றது.
இதில், அ.தி.மு.க முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாடி. செல்வ முத்துக்குமரன், முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மாமல்லன், நாடி.செந்தமிழன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அல்லிவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன், தி.மு.க நிர்வாகி முத்துக்குமரன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பொறுப்பாளர்கள் எம். என்.ஆர்.ரவி, நெடுஞ்செழியன் நாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி மற்றும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி வி.ஆர்.ஏ.அன்பு மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருங்காலங்களில் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். நிகழ்சியில் பயிற்சியாளர்கள் குணசெல்வன் பிரபு மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணினி அறிவியல் துறை தலைவர் பிரியா, ஆங்கிலத்துறை உதவிபேராசிரியர் சத்தியமூர்த்தி, உதவிபேராசிரியர்கள் தம்பிஞானதயாளன், சுரேஷ், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவிபேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
திருவெண்காடு-மங்கைமடம் இடையே சாலையோரம் தனியாரால் கொட்டப்படும் மருத்துவ, இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கைகோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்ததினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு - மங்கைமடம் இடையே அமைந்துள்ள மணிகரனையாற்றின் கரையோரமும் பிரதான சாலையோரமும் இருந்த குளத்தை ஆக்கிரமித்தும் இரண்டு ஊராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் கொட்டி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனிநபர்கள் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் காற்றின் காரணமாகவும் குப்பைகள் சரிந்தும், அருகில் உள்ள நீர் நிலைகளில் காற்றில் குப்பைகள் அடித்து செல்வதால் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அவ்வப்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கபடுவதால் புகை மூட்டத்தாலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஊராட்சியே குளத்தை மூடி குப்பைகளை கொட்டியதுடன் ஆற்றின் கரையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திய தனிநபர்களும் அபாயகரமான மருத்துவ கழிவுகுப்பைகள், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குப்பைகளையும் இறைச்சி கழிவு துர்நாற்றத்தையும் கடந்தே திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
எனவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாகன ஓட்டிகள் இணைந்து கண்ணில் கருப்பு துணி கட்டி குப்பை கொட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றின் கரையோரமும், கொட்டப்படும் கழிவுகளை, குப்பைகளை உடனே அகற்றவும் குப்பைகளால் மூடப்பட்ட குளத்தை மீட்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலைகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி வருவதாலும், கடிப்பதாலும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நகர்மன்ற கூட்டத்தில் 24 வார்டு உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து சீர்காழி நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி இன்று சீர்காழியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய்கள் பிடிக்கும் பணி தொடங்கியது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி, தென் பாதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் வலை வைத்து பிடித்து கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது.
பிடிபட்ட நாய்கள் அனைத்தும் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர் மூலம் கருத்தடை செய்யப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்ட பகுதிகளில் விடப்படும் என்ன மிருகவதை தடுப்பு ஆய்வாளர், முரளிதரன் தெரிவித்தார். பொது விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த அன்பழகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ். இதனை சீர்காழி மக்கள் வரவேற்றுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் பலியானார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே பரசலூர் கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் சுரேஷ் (வயது 26). திருமணமாகாதவர். காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் 2 நாட்களுக்கு முன்பு மன விரக்தியில் மது அருந்தியுள்ளார்.
இந்நிலையில் வீட்டுக் கொல்லையில் வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றிக்கொன்டு தற்கொலை முயற்சியில் ஈ;டுபட்டுள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி உள்ளனர்.
அங்கே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தகவலறிந்த திருவாரூர் மேஜிஸ்ட்ரேட் நேரடி வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
சீர்காழி நகராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராஜசேகரன், முபாரக்அலி, ரம்யா, ஜெயந்தி, வள்ளி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செ ல்வம் பங்கேற்று தூய்மைபணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக நெகிழி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மஞ்சல் பைகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.
கைவிளா ஞ்சேரி பிரதானசாலை முதல் கச்சேரி சாலை வரையில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுசேகரி க்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி,பிளா ஸ்டிக் நெகிழிபொரு ட்கள் தனியே சேகரித்து பொதும க்களுக்குவிழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90 க்கும்மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொ ண்டனர்.
இதில் நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜேயே ஸ்வரன், பந்தல். முத்து, ஜெ.கே.செந்தில், இரா.தனராஜ், பாரூக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் சியாமளா தேவி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன் மயூரநாதர் பெரிய கோயில் அருகே பழமை வாய்ந்த சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மயிலாடுதுறை காவல் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைக நிறைவடைந்ததை தொடர்ந்து.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தப்படி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. வேத விற்ப்பனர்கள் மந்திரங்கள் ஓத, கருடன் வட்டமிட வானவேடிக்கையுடன் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழாக் குழுவின் கவுரவத் தலைவர் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. சுவாமிநாதன், தலைவர் டி.வாசு, செயலாளர்கள் சீனிவாசன், சௌமியன், பொருளாளர் பத்மநாபன், துணைத் தலைவர் முருகதாஸ், நகரமன்ற உறுப்பினரும், துணைச் செயலாளருமான சதீஷ்குமார் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ் என ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 99 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்.எல்.. நிவேதா முருகன் வழங்கினார்.
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மாலை மாலை அணிவித்து மாயாதை செய்தனர்.
தொடர்ந்து சின்னூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் ஜி. சித்ரா மற்றும் திருக்களாச்சேரி உதவிபெறும் பள்ளி சத்துணவு சமையலர் எஸ்.சீதா ஆகியோர் பணியின்போது காலமானதை தொடர்ந்து அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.5 லட்சத்துக்கான ஆணைகள் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் அவரது திரு உருவப் படத்திற்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், பரசலூர் வர்த்தக அணி சங்க தலைவர் பாலையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறையில் திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் முன்னிலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிட்டப்பா அங்காடியில் நடைபெற்றது.
இதில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஏழைகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடினர். இதில் நகர துணை செயலாளர் ஆர். கே. சங்கர் உள்ளிட்ட திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவ ட்டம் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகபூஜை நடைபெற்றது. திருக்கடையூரில் தருமபுரம் ஆதீன த்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகிறது.
கடந்த மார்ச் 27- ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் தர்மபுர ஆதீனம் 27 வது குருமகாசந்நதானம் மாசிலாமணி தேசிக ஞானச ம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மண்டலாபிஷேகபூஜை நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகர்,அமிர்த கடேஸ்வரர், காளசம்ஹா ரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநாங்கூரில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் நேற்று தொடங்கியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மதங்காஸ்ரமம் என்னும் திருநாங்கூர் அஞ்சனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் 5-ம் ஆண்டு பன்னிரு சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் நேற்று தொடங்கியது. நாளை 31-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், விநாயகர் அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு செல்லியம்மன் கோவிலில் இருந்து புஷ்பங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மகா காளி அம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாவில் இன்று காலை அனைத்து கோவில் உற்சவபேர முகூர்த்த ங்களும் மதங்கீஸ்வரர் சாமி கோவில் எழுந்தருளல் நடைபெற்றது. இதையடுத்து பஞ்சாட்சர ஜெப ஹோமத்துடன் அபிஷேக ஆராதனையும், பூர்ணாஹுதி தீபாராத னைகள் செய்து பிரசா தங்கள் வழங்க ப்பட்டது.
இரவு 7 மணிக்கு பன்னிரு சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ மதங்க மகரிஷிக்கு பன்னிரு ரிஷாபாரூடராய் திருக் காட்சி அளித்தல் அதனை தொடர்ந்து திருவீதி உலா காட்சி நடைபெற உள்ளது.
நாளை அதிகாலை 4.30 மணிக்கு அனைத்து பன்னிரு முகூர்த்தங்களும் கோவில் வந்தடைந்து சமகாலத்தில் தீபாராதனைகள் நடைபெறும்.
இதைத் தவிர விழா நாட்களில் சைவ சமய ஆன்றோர்களின் சமய சொற்பொழிவுகள் திருமுறை பாராயணங்கள் கலை நிகழ்ச்சிகள் நாதஸ்வர இன்னிசைகள் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், ஆய்வாளர் மதியழகன், செயல் அலுவலர் முருகன் மற்றும் திருநாங்கூர் லார்ட் சிவா டிரஸ்ட், பன்னிரு ரிஷப சேவை விழாக்குழு, திருநாங்கூர் அனைத்து சிவாலய கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் கட்டப்படும் நூலககட்டிடம், ரெட்டிகோடங்குடி வா ய்க்கால் தடுப்பணை, மேல தெருவில் மகாத்மா காந்தி தேசியஊரகவேலை உறுதிதிட்டத்தின்கீழ் அமைக்க ப்படும் கப்பிசாலை ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கு பதிவேடு களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஓவர் சீயர்கள் வேலழகன், மோகன் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதாபேகம்க மாலூதீன் மற்றும் வஜிரூதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து கதிராமங்கலம் ஊராட்சி, திருப்புன்கூர், அகணி ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.






