என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பிசாலை"

    சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர்  லலிதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் கட்டப்படும் நூலககட்டிடம், ரெட்டிகோடங்குடி வா ய்க்கால் தடுப்பணை, மேல தெருவில் மகாத்மா காந்தி தேசியஊரகவேலை உறுதிதிட்டத்தின்கீழ் அமைக்க ப்படும் கப்பிசாலை ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கு பதிவேடு களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஓவர் சீயர்கள் வேலழகன், மோகன் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதாபேகம்க மாலூதீன் மற்றும் வஜிரூதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து கதிராமங்கலம் ஊராட்சி, திருப்புன்கூர், அகணி ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ×