என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாம்புள்ளி கீழத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் 10 கேன்களில் 350 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முருகனை கைது செய்து, தப்பி ஓடிய முருகனின் சகோதரர் ராமலிங்கம் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மத்திய, மாநில அரசுகள் 2-ம் கட்ட ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    சீர்காழி:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மத்திய, மாநில அரசுகள் 2-ம் கட்ட ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் சீர்காழி பகுதியில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நிம்மேலி ஊராட்சி சார்பில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாகரன், நிம்மேலி, அரூர், தத்தங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும் ஊராட்சி தோறும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    பிள்ளை பெருமாநல்லூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பிள்ளை பெருமாநல்லூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டக்டர் கார்த்திக்சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார்.

    இந்த புகாரில் அந்த மாணவி, தான் பள்ளியில் படித்தபோது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை(வயது50) என்பவரிடம் தடகள விளையாட்டுக்கான பயிற்சி பெற்றதாகவும், அந்த காலத்தில் ஆசிரியர் அண்ணாதுரை தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என்னை(மாணவியை) தொடர்பு கொண்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை, கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாகவும் இந்த பணத்தை தனது வீட்டுக்கு வந்து வாங்கி செல்லுமாறு கூறினார். இதனால் நான் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதைப்போல பள்ளியில் படித்த போது எனக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்தனர்.

    உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது உள்நோக்கத்துடன் மாணவி புகார் அளித்துள்ளார் என அவர்கள் கூறினர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்களையும், ஆசிரியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
    திருவெண்காடு அருகே உள்ள திருநகரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே உள்ள திருநகரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் இளம்பிறை, சுகாதாரஆய்வாளர் ரங்கராஜன், வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 287 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் திருவாலி ஊராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் தொடங்கி வைத்தார். முகாமில் 212 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. முகாமை ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் ஓய்வு பெற்ற ரெயில்வே என்ஜின் டிரைவர் வீட்டில் 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு லட்சுமி நகரில் வசித்து வருபவர் சுவாமிநாதன் (வயது 79). இவர் ரெயில் என்ஜின் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி இறந்துவிட்டார். இந்தநிலையில், இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 9-ந் தேதி கோவையில் உள்ள இளைய மகன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற சுவாமிநாதன், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை சுவாமிநாதன் ஊர் திரும்பினார்.அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
    குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர், தேரழுந்தூர் பள்ளிவாசல் தெருவில் முகமது குத்தூஸ் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இளங்கோவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து இளங்கோவனின் மனைவி மங்கையர்கரசி கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே செருதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவர் வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜன் வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் சாராய ஊறல் போட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 25 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடமாடும் பழ வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி: 

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உழவர் சந்தை எதிரே மாதிரவேளூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சீர்காழி நகராட்சியில் பழங்கள் விற்பதற்காக அனுமதி பெற்று பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் நேற்று காலை விற்பனை செய்து வந்த ஆம்னி வேனில் பேட்டரி பகுதியில் தீப்பிடித்து வேன் எரியத்தொடங்கியது. உடனடியாக பழங்களை அப்புறப்படுத்திய விற்பனையாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவெண்காடு அருகே காரைமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே காரைமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரிசோதனை ஆகியவை சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி மற்றும் கண்டறியும் சோதனை இந்த முகாம்கள் மூலம் செய்யப்பட உள்ளது. சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றால் அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர். முகாமில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதேபோல மயிலாடுதுறை அருகே மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமாரசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியம்மாள், துணைத் தலைவர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை ராஜகுமார் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் சுந்தரம்பாள்தேவேந்திரன் (35). இவரின் குடிசை வீடு மின்கசிவால் எரிந்து சேதமானது. சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதில் வீட்டுக்குள் வைத்திருந்த 8 மூட்டை விதை நெல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மற்றும் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினர்.

    சீர்காழி பகுதி காட்டுயிர் ஆய்வாளர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது43). இவர் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளர். டபிள்யு.டி.ஐ நிறுவனமும் இந்திய அரசின் யானைகள் திட்டமும் (பிராஜக்ட் எலிபேன்ட்) இணைந்து இந்தியா முழுவதும் உள்ள யானைகளின், வலசைப் பாதைகளை கண்டறிந்து ஆவணப்படுத்திய பணியில் முக்கிய பங்காற்றியவர்.

    அதுவே ரைட் ஆப் பேசஜ் எனும் ஆவண நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 108 வலசை பாதைகளின் வரைபடங்களையும் ஆவணப்படுத்தியதில் ராம்குமாரின் பங்களிப்பு உள்ளது.

    ஏவிசி கல்லூரியில் வன உயிரின அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். கோவை வனக் கோட்டத்தின் நில அமைப்பு, யானைகளின் வாழ்விடம், வலசை பாதைகள், யானை மனிதன் முரண்பாடு ஆகியவை உள்ளடக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். ஜி.ஐ.எஸ். எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை கையாள்வதில் வல்லமை கொண்டவர்.

    இந்திய வன உயிரின அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள யானைகளின் வலசை பாதைகளை காப்பாற்றுவதில் பெரும் பணியாற்றுகிறது. தனியார் வசமுள்ள, சில வலசைப் பாதைகளை விலை கொடுத்து வாங்கி அதனை யானைகளுக்காக மீட்டுக்கொடுக்கும் பணியை அவ்வமைப்பினர் செய்து வருகின்றனர்.

    அவ்வாறு கேரளாவின் வயநாடு பகுதியிலும் கர்நாடகாவிலும் சில வலசைப் பாதைகள் மீட்டெடுக்கப்பட்டன. அந்த பாதைகளை மீட்டெடுப்பதில் ராம்குமார் பங்களிப்பு மிக முக்கியமானது.

    பல ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு வந்த ராம்குமார் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கும்பகோணத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவு, 2 குழந்தைகள் உள்ளனர்.

    ×