என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மின் மோட்டார் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் திருவிழந்தூர் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் வந்த 2 பேர் உட்பட 3 பேரும் முன்னுக்குபின் பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் தெற்கு வீதியில் உள்ள மகாலிங்கம் மகன் செந்தில்குமார் என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மின் மோட்டாரை திருடி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ மற்றும் நீர் இறைக்கும் மோட்டார், குழாய்கள், வயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செந்தில்குமார் (வயது 36) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (30), அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சிவச்சந்திரன் (23), ரங்கநாதன் மகன் தினேஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சித்தர்காடு தண்டபாணி செட்டி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வினோத்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). கொத்தனாரான இவருக்கும் சீதாலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் ஒரு வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பாலாஜி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் இந்திராணி (65) கொடுத்த புகாரின்பேரில், பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
தமிழகத்தில் நாளை (12-ந்தேதி) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ரூ.65 கோடி செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தென்னலக்கூடி கூப்பிடுவான் உப்பனாற்றை தூர்வார கடந்த 10 நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆற்றை முறையாக தூர்வாராமல் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டி விவசாயிகள், ஆற்றில் இறங்கி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை வெள்ள காலங்களில் செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வடிகாலாக இந்த கூப்பிடுவான் உப்பனாறு திகழ்வதாகவும், இந்த உப்பனாற்றை சரிவர தூர் வாராததால் மேற்கண்ட கிராமங்கள் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் உடனடியாக உப்பனாற்றை சரியாக தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மயிலாடுதுறையில் வேளாண் இயக்குனர் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் முன்னிலை வகித்தார். இதில் தமிழக வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சாகுபடி பரப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்ததை அடுத்து டெல்டா விவசாயிகள் சாகுபடி பணிகளை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். குறுகிய கால நெல் ரகங்களான கோ-51, ஏ.எஸ்.டி-16 போன்ற நெல் ரகங்கள் வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் 3,500 மெட்ரிக் டன் விதை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் இருப்பில் உள்ளது. சாகுபடிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பாஸ்பேட் போன்ற உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. உயிர் உரங்கள், நுண்ணூட்டகலவை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் முன்கூட்டியே நாற்றங்கால் தயார் செய்து நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து விதமான இடுபொருட்களும் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டி.ஏ.பி. உரம் தயாரிக்கும் நிறுவனம் மூலப்பொருட்கள் விலை உயர்வால் உரம் விலையை உயர்த்தியது.
அதற்கு மத்திய அரசு மானியம் கொடுத்து தற்போது பழைய விலை ரூ.1,200-க்கு வாங்கி கொள்ளலாம். தனியார் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் வந்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். .
கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு ரூ.84 கோடியில் ரூ.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை 10 நாட்களில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு புெரவி, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ.1,715 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்தது. அதில் 1,586 கோடி விவசாயிகளுக்கு (93 சதவீதம்)் வழங்கப்பட்டு விட்டது. ஒருசில விவசாயிகளுக்கு வங்கி கணக்கு தவறாக இருப்பதாக பணம் திரும்பவந்து விட்டது. விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கை கொடுத்தால் விடுபட்டவர்களுக்கு உடன் வழங்கப்படும்.
வேளாண் இடுபொருட்கள் விதை, நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. எந்திரங்கள் வாங்க ஆன்லைனில் உழவன் ஆப் மூலம் பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாக அலுவலர்கள் நியமிக்க அரசுக்கு அனுமதி கேட்டுள்ளோம். அதுவரை நாகையில் இருப்பவர்கள் தான் கூடுதல் பொறுப்பு வகிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து வில்லியநல்லூர் கிராமத்தில் தனியார் வயலில் எந்திரம் மூலம் நாற்று நடப்படுவதை வேளாண்மை இயக்குனர் நேரில் பார்வையிட்டார்.
மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் 2 மாணவிகள் புகார் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2010-2018 வரை அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவி உடற்கல்வி பயின்றபோது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியும் பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறி, தற்போது கல்லூரியில் படித்து வரும் 21 வயது அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்து தற்போது தைரியத்தை ஏற்படுத்திகொண்டு போலீசில் புகார் அளித்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து, 5-ந் தேதி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உடற்கல்வி ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 2008, 2016-ம் ஆண்டுக்கு முன்பு படித்த 2 மாணவிகள் தங்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இந்த புகார்களை பதிவு செய்த மகளிர் போலீசார், 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் அண்ணாதுரையை நீதிபதி ரிசானாபர்வீன் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீர்காழி மற்றும் பொறையாறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன், மாதர் சங்க செயலாளர் தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு உடனடியாக தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசிடம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை பல்லாயிரம் கோடியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைத்து பெட்ரோல் ரூ.50-க்கும், டீசல் ரூ.40-க்கும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் இளமதியம், மாவட்ட நிர்வாகி ராமன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயக்குமார், பாஸ்கரன், வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல பொறையாறு கடைத்தெருவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர், வேதநாயகம் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல செம்பனார்கோவில் கடைத்தெருவில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் செங்கல்பட்டு மருந்து ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தினமும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் கூறினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டாலும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை, சிகிச்சை, இறந்தவர்கள் பற்றிய விவரங்கள், நாகை மாவட்டத்துடன் சேர்த்து தான் வெளியிடப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்காக கட்டுப்பாட்டு அறை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு என தனியாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து மயிலாடுதுறையில் கட்டப்பாட்டு அறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 6-ந் தேதி வரை 63 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 17 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2 ஆயிரத்து 663 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 ஆயிரத்து 234 பேர் வீட்டு தனிமையிலும், 429 பேர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 13 ஆயிரத்து 303 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரத்து 351 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 75 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் தினமும் சராசரியாக 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சராசரியாக 270 பேருக்கு தொற்று உறுதி என முடிவுகள் வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
மணல் திருட்டு, சாராயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை ஒழிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங் நியமிக்கப்பட்டார். இவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக் கொண்ட சுகுணாசிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்பட சிறப்பு கவனம் எடுத்து தேவையானவற்றை கொண்டு வருவேன். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தோடு நின்று விடாமல், பொதுமக்களுக்கு உண்மையான நண்பனாக இருக்கும் வகையில் காவல்துறை செயல்படும். பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த மாவட்டத்தில் ரவுடியிசம், மணல் திருட்டு, சாராயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்களுடன் இணைந்து இந்த புதிய மாவட்டத்தில் புதுமை படைக்கும் வகையில் எனது முயற்சி அமையும். பொதுமக்கள் தங்கள் புகார் குறித்து போலீஸ் நிலையங்களில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இந்த பகுதியில் விளையும் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கத்திரி, வெண்டை, புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இந்த பகுதியில் விளையும் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். எனவே பொதுமக்கள் காய்கறிகளை தேடி வந்து வாங்கி செல்வர். ஆனால் தற்போது நிலைமை மாறி காய்கறிகள் விற்பனை இன்றி சேதமடைந்து. வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் கூறுகையில், தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி ஒவ்வொரு ஆண்டும் காய்கறி சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு காய்கறிகள் அனைத்தும் விற்கப்படாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அதன்படி தரமாகவும், முறையாகவும் பயிரிட்டு வருவதால் இந்த காய்கறிகளை விரும்பி வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகளை தேடிவந்து வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. அரசு ேதாட்டக்கலை துறை மூலம் காய்கறிகளை விற்பனை ெசய்ய வாய்ப்பளித்துள்ள நிைலயில், கொள்ளிடம் தோட்டக்கலை துறை அதிகாரிகளும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் எங்கு பார்த்தாலும் கொரோனா பரவலாக இருந்து வருவதால் விற்பனைக்கு எடுத்து செல்ல விரும்பவில்லை. மேலும் அனைத்து காய்கறிகளும் நான்கில் ஒரு பங்கு கூட விற்பனையாகவில்லை.
இந்த நிலையில் காய்கறிகளை வெளியில் சென்று விற்க பயமாக உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் பெரும் சிரமம் ஏற்பட்டுவிடும். எனவே காய்கறிகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்.
இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் பெரும் வாய்ப்பு இருந்து வந்தது. இந்த ஆண்டு நேரில் சென்று விற்பனை செய்தால் அசல் கிடைப்பதே சிரமமாகும். எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், என்னையும் எனது குடும்பத்தையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதே இந்த ஆண்டு எனக்கு பெரும் லாபமாகும் என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கத்திரி, வெண்டை, புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இந்த பகுதியில் விளையும் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். எனவே பொதுமக்கள் காய்கறிகளை தேடி வந்து வாங்கி செல்வர். ஆனால் தற்போது நிலைமை மாறி காய்கறிகள் விற்பனை இன்றி சேதமடைந்து. வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் கூறுகையில், தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி ஒவ்வொரு ஆண்டும் காய்கறி சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு காய்கறிகள் அனைத்தும் விற்கப்படாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அதன்படி தரமாகவும், முறையாகவும் பயிரிட்டு வருவதால் இந்த காய்கறிகளை விரும்பி வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகளை தேடிவந்து வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. அரசு ேதாட்டக்கலை துறை மூலம் காய்கறிகளை விற்பனை ெசய்ய வாய்ப்பளித்துள்ள நிைலயில், கொள்ளிடம் தோட்டக்கலை துறை அதிகாரிகளும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் எங்கு பார்த்தாலும் கொரோனா பரவலாக இருந்து வருவதால் விற்பனைக்கு எடுத்து செல்ல விரும்பவில்லை. மேலும் அனைத்து காய்கறிகளும் நான்கில் ஒரு பங்கு கூட விற்பனையாகவில்லை.
இந்த நிலையில் காய்கறிகளை வெளியில் சென்று விற்க பயமாக உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் பெரும் சிரமம் ஏற்பட்டுவிடும். எனவே காய்கறிகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்.
இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் பெரும் வாய்ப்பு இருந்து வந்தது. இந்த ஆண்டு நேரில் சென்று விற்பனை செய்தால் அசல் கிடைப்பதே சிரமமாகும். எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், என்னையும் எனது குடும்பத்தையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதே இந்த ஆண்டு எனக்கு பெரும் லாபமாகும் என்றார்.
புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 வாகனங்களை புதுப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் ஓட்டி வந்த 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 30 இருசக்கர வாகனங்களை கொள்ளிடம் போலீசார் பறிமுதல் செய்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விதிகளை மீறி திறந்து வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல பொறையாறு, செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஊடரங்கை மீறி சாலைகளில் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தனர். அவ்வாறு சுற்றித்திரிந்தவளின் 500 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதை பயன்படுத்திய மதுப்பிரியர்கள் போதைக்காக ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி, அந்தந்த பகுதியில் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளி கிராமத்தில் சிலர் சாராய ஊறல் போடுவதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளி கிராமத்தில் சந்தேகப்படும் பகுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 4 இடங்களில் சாராய ஊறல் போட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பூமிக்கு அடியில் போட்டிருந்த 720 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுதொடர்பாக பழைய திருச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), தினேஷ் (20), சுப்ரமணியன் (46), கபிலன் (27) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் தினம் தோறும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்தநிலையில் நேற்று சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பெயரில் களப்பணி உதவியாளர் சீதாலட்சுமி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் வ.உ.சி தெற்கு தெருவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெரு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.






