search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director of Agriculture"

    • வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு நடத்தினார்.
    • இதில் விவசாயிகள் வேளாண்மை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திடபயனடையலாம் என்றார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்புகளுக்காக 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டக்குளம், நாச்சிகுளம், நெடுங்குளம், சி.புதூர், ராமையன்பட்டி, மன்னாடிமங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளாகும்.இந்த பஞ்சாயத்துகளில் 15 ஏக்கர் அளவில் தரிசு நிலத் தொகுப்பிற்காக இட ஆய்வு பணி தொடங்கியது.

    ராமையன்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்பு இடத்தை வேளாண் மை இணை இயக்குனர் விவேகானந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, மின்சார வசதியுடன் தரிசு நிலத்தொகுப்பில் சாகுபடி செய்வதற்காக அமைத்து தரப்படுகிறது. இதில் விவசாயிகள் வேளாண்மை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திடபயனடையலாம் என்றார். வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகி, வேளாண்மை அலுவலர் பானுமதி, உதவி பொறியாளர் மோகன்ராஜ், வேளாண்மை உதவி அலுவலர் பாண்டியராஜன், கிராம உதவியாளர் ஜெயக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் கண்ணன், விவசாயிகள் ராஜேந்திரன், கோவிந்தன், ராம்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×