என் மலர்
மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே குளத்தில் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி ஊராட்சி பவுசுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் மகன் சந்திரமோகன் (வயது 33). இளங்கலை பட்டதாரி. திருமணமாகாத இவர் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் கடந்த 21-ந் தேதி பவுசுப்பேட்டை மருத்தானி குளத்தில் இறங்கி கை, கால், முகம் கழுவி கொண்டு இருந்துள்ளார். அப்போது தடுமாறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அந்த பகுதியினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய சந்திரமோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திரமோகனின் சகோதரர் சக்கரவர்த்தி (22) கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கொள்ளிடம் வேளாண் உதவி அலுவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சீர்காழி:
மணல்மேடு அருகே குமாரமங்கலம் மேற்குதெருவை சேர்ந்தவர் ராஜா ராமன் மகன் கண்ணன் (40) இவர் கொள்ளிடம் வேளாண்மைத்துறையில் வேளாண் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே கத்தியால் குத்தப்பட்ட வேன் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே எஸ்.எஸ். நல்லூர் பணப்பள்ளி கிராமம் தலையாரி தெருவை சேர்ந்த சேகர் மகன் பிரவீன் (வயது 30). வேன் டிரைவர். இவர் கடந்த 1-12-2021 அன்று மாலை வேனில் ஏற்றி வந்த பள்ளி குழந்தைகளை நத்தம் கடைவீதியில் இறக்கி விட்டுவிட்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பே்ா முன்விரோதம் காரணமாக பிரவீனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கத்திக்குத்தில் காயம் அடைந்த பிரவீனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அஜித் (வயது 27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த சேந்தங்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நடராஜன் மகன் பிரகாஷ் (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிற நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்துக்கும், தருமபுரம் ஆதீனத்துக்கும் ஆதரவாகவே பேச்சு வார்த்தைகளை நடத்துவதால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை முடித்துக் கொள்ள முடியாது என்று கூறினர்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரமாக இரவு-பகலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விவசாயிகளுக்கு துணையாக போராட்டக்களத்தில் இருந்து வருகின்றனர்.
நான்கு வழிச்சாலையால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும், குடியிருப்புகளை இழக்கும் ஏழைகளுக்கும் உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வேண்டுமென்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டி.மணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஒட்டுமொத்த பெண்களும் ஊர் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதோடு டி.மணல்மேடு கிராமத்தின் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் உதயக்குமார் தலைமையில் உணவு, குடிநீர், தேநீர், இரவு படுக்கைகான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கொத்தங்குடி கிளை சார்பில் அரிசி மூட்டை பண உதவி, திருக்கடையூர் முத்து வாட்டர் பாட்டீல், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கலெக்டரும், தருமபுரம் ஆதீனமும் முடிவு எடுப்பார்களா என எதிர்பாப்பு நிலவுகிறது.

செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பு மகள் சாந்தினி (வயது 16). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தினி தனது தாயிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் செல்போன் வாங்கி தர மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த மாணவி சாந்தினி கடந்த 19-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சாந்தினி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழியில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சீர்காழி மதினா நகரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர் கொடுக்கும் நகைகளை வாடிக்கையாளர்கள் அவர்கள் பெயரில் வங்கியில் அடகு வைத்து பணம் கொடுக்க கேட்டு கொண்டார். அதன்பேரில் வாடிக்கையாளர்கள், கலைச்செல்வன் கொடுத்த நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நகைகள் அனைத்தும் போலி என்பதும், ரூ.1 கோடியே 20 லட்சம் வரை மோசடி செய்தது வங்கி அதிகாரிகள் ஆய்வின் போது தெரிய வந்தது.
இதனை அடுத்து நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனுக்கு அடகு வைக்க உதவியதாக கூறி 28 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இதில் சிலர் ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் உள்ள முதியவர்களும் உள்ளனர். தங்களுக்கும் இந்த முறை கேட்டும் எந்த தொடர்பும் இல்லை என 28 பேரும் உறுதி அளித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட கலைச்செல்வன் வாடிக்கையாளர்களுக்கு முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
தான் செய்த தவறுக்கு தனது வீட்டை வங்கியின் பெயரில் பிணையாக கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை வங்கி அந்த வீட்டை எதுவும் செய்யாமலும் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்திவிட்டு 28 பேரின் வங்கி கணக்குகளை மட்டும் முடக்கியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலியாக 300 பவுன் நகைகளை அடகு வைத்த கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வங்கி கணக்குகளை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, திருக்கடையூர் டி.மணல்மேட்டில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீட்டை இதுவரை வழங்காமல் சாலை அமையவுள்ள பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து, ஏழை மக்களின் குடிசைகளை அகற்றும் நடவடிக்கைகளில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஈடுபட்டு வரும் நிலையில் சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து காட்டுச்சேரி அருகேயுள்ள தேவானூர் பகுதி வரை (30 கிலோமீட்டர் தொலைவு) மட்டும் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையினை ஒப்பந்த நிறுவனம் வழங்காமல் போலீசார், வருவாய்த்துறையினரின் துணையோடு பணி ஒப்பந்த நிறுவனம் மிரட்டி வருவதாகவும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வில்ஸ்பன் ஒப்பந்த பணி நிறுவன அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமையில் நேற்று காலை துவங்கியது.
சி.பி.எம். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மார்க்ஸ், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சி.பி.எம். மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் காபிரியேல் ஆகியோர் பேசினர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் ஆனந்தன் மற்றும் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து அங்கேயே சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் ஹரிதரன், டி.எஸ்.பி. லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வெள்ளக்குளம் பகுதியில் விவசாயிகளின் தோட்ட வேலிகளை உடைத்தெறிந்து, 15 மரங்களை வெட்டி வீழ்த்தினர். தகவலறிந்து வந்த போராட்டக்குழுவின் ஒரு பகுதியினர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எந்திரத்தை விரட்டியடித்து வேப்பஞ்சேரி- திருக்கடையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளை அடக்கு முறையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், போராட்டக் குழுவினரும் வன்மையாக கண்டித்ததோடு, நான்கு வழிச்சாலைக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.
இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பஸ்சுக்காக மயிலாடுதுறை கலெக்டர் காத்திருந்ததையும், பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்ததையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மயிலாடுதுறை:
மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சைக்கிள் பயன்பாடு, பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று காலை தனது முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு பஸ்சில் சென்றார்.
முன்னதாக அவர் தரங்கம்பாடி சாலையில் கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகம் எதிரே 5 நிமிடம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த டவுன் பஸ்சில் ஏறி பொதுமக்களுடன் நின்றபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பயணித்தார்.
1½ கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் பயணம் செய்த கலெக்டர், மயூரநாதர் கீழவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 250 மீட்டர் தூரம் நடந்து சென்று அலுவலகத்தை அடைந்தார்.
இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்று மாசு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இதனை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் தனி வாகனத்தில் செல்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தியோ, நடந்தோ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இன்று(அதாவது நேற்று) நான் பஸ்சில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இது என்னால் முடிந்த சிறிய முயற்சிதான். இதுபோன்ற சிறிய முயற்சி நிச்சயமாக பெரிய அளவில் பலனளிக்கும். பூமியை பாதுகாக்க அனைவருடைய பங்கேற்பும் இருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்களும், பொதுபோக்குவரத்தை பயன்படுத்தியோ, சைக்கிளிலோ, நடந்தோ அலுவலகத்துக்கு செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ்சுக்காக கலெக்டர் காத்திருந்ததையும், பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்ததையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கும்பகோணம் நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் உள்ள சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசவுந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக 8½ அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
இக்கோவிலில் கடந்த 17-ம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் தொடங்கி நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசவுந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.
இதேப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன உற்சவ விழா திருவீதி உலாவுடன் நடைபெற்றது.இதனையொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ,நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் உள்ள சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த50 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் மஞ்சளாற்று பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை அருகே பொன்னூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30), ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த யூஜின்ஜான் மகன் தேவபிரசாந்த் (24) என்பதும், இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 50 சாராய பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், தேவபிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூரை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆனந்த் தன்னை கைவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், நானும் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூரை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த்தும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆனந்த் ஆசைவார்த்தை கூறினார். அதை நான் நம்பி அவருடன் நெருங்கி பழகினேன்.
அப்போது ஆனந்த், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று என்னிடம் பணம் கேட்டார். நான் நகைகளை அடமானம் வைத்து அவருக்கு(ஆனந்துக்கு) பணம் கொடுத்தேன். படித்து முடித்ததும் தான் அரசு வேலையில் சேர உள்ளதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வங்கி கணக்கில் இருந்தும், நேரடியாகவும் பல லட்சம் கொடுத்தேன்.
இந்த நிலையில் எனக்கு தெரியாமல் ஆனந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்த தகவல் அறிந்து நான் இது தொடர்பாக கேட்க சென்றேன். அப்போது அவர் தனது உறவினர்களை வைத்து என்னை தாக்கியதுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியது, பணம் வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆனந்தை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்தும் அவர் வரவில்லை.
இதனையடுத்து ஆனந்த் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, திருமண ஆசைகாட்டி வாழ்க்கையை கெடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் ஆனந்த் தற்காலிக விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
சீர்காழி:
சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை மின்வினியோகம் இருக்காது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரெங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், அணைக்கரை சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதேபோல செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதி 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்தார்.