என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய ஐதீக விழா நடந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் - அபிராமி கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளில் அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக நடைபெறுவது வழக்கம். 

    தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் - அபிராமி கோவிலுக்கு வந்தார்.

    அப்பொழுது மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார். இதனை கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தவர்களை இவர் யார் என்று கேட்டார். அப்பொழுது சுப்பிரமணிய பட்டரை பித்தன் என்று அருகில் இருந்தவர்கள் மன்னரிடம் கூறினர்.

    அப்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டதற்கு, தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை அமாவாசையை பவுர்ணமி என்றார். இரவு பவுர்ணமி தோன்ற வேண்டும் அப்படி இல்லை என்றால் உன் தலையை எடுத்து விடுவேன் 
    என்றார் மன்னர்.

    உடனே சுப்பிரமணிய பட்டர் அபிராமியை நோக்கி அந்தாதிப் பாடல்களை பாட ஆரம்பித்தார். அப்போது 79-வது பாடலான Ôவிழிக்கே அருளுண்டு என்ற பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார்.

    அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக தோன்ற காட்சியளித்தது. இந்த அதிசிய நிகழ்வுகளை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என அழைக்கப்பட்டார்.

    இந்த சிறப்பு மிக்க தை அமாவாசை நாளான நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர்.

    இதில் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    பின்னர் அபிராமி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக ஆணைக் குளத்தரையில் அமைந்துள்ள எதிர்காளீஸ்வரர் கோவிலில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.
    சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் நாராயணப்பெருமாள் கோயிலில் 11பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உத்ஸவம் பிப்2 புதன்கிழமை நடைபெறவுள்ளது.

    இதனிடையே சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சப் கலெக்டர் ஜி.நாராயணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.லாமெக்,வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமாள் வீதியுலா புறப்பாடு,வழிபாடு நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டும்,கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில்  ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி நடராஜன்,கோயில் நிர்வாக அலுவலர் குணசேகரன் மீனாட்சி உதவி பெறும் பள்ளி செயலர் ரகுநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.ஆர்.ஏ. அன்பு மற்றும் விழா கமிட்டியினர்,விழா குழுவினர்கள் பங்கேற்றனர்.

    குத்தாலத்தில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிச் சென்ற இருவரை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப் (35). ஆட்டோ டிரைவர். கடந்த 14-ந் தேதி இவரது வீட்டு வாசலில் நின்ற ஆட்டோவை காணவில்லை.

    எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆட்டோ மாயமானது குறித்து முத்தலிப் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் சேர்ந்த அலாவுதீன் (31).

    நன்னிலம் தாலுகா ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் (31) ஆகிய இருவரும் ஆட்டோவை திருடிச் சென்று திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அலாவுதீன், சித்திக் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் திருடி விற்பனை செய்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    திருநாங்கூர் நாராயணப்பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் நாராயணப்பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உத்ஸவம் பிப்ரவரி-2 புதன்கிழமை நடைபெறவுள்ளது.

    இதனிடையே சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    சப்&கலெக்டர் ஜி.நாராயணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.லாமெக், வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமாள் வீதியுலா புறப்பாடு, வழிபாடு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோயில் நிர்வாக அலுவலர் குணசேகரன் மீனாட்சி உதவி பெறும் பள்ளி செயலர் ரகுநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.ஆர்.ஏ. அன்பு மற்றும் விழா கமிட்டியினர், விழா குழுவினர்கள் பங்கேற்றனர்.
    கால்பந்தாட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழியில் செயல்பட்டு வரும் பால்கன்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் அண்மையில் நடந்து முடிந்த மினி புட்பால் தென் இந்திய அளவிளான போட்டியில் தமிழக அணி முதலிடம் வென்றது. வெற்றி பெற்ற தமிழக அணியில் பால்கன்ஸ் அணி வீரர்கள் முகமது பர்வஜ், பாலாஜி, ராமநாதன், விக்ரம் ஆகிய வீரர்கள் தங்கபதக்கம் வென்றனர்.

    இதனிடையே தங்கபதக்கம் வென்ற வீரர்களையும், இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்றுனர்கள் ர.அமுது, அரவிந்த், பு. சுபாஷ் குமார், வீ.இளவரசன் ஆகியோரை ச.மு.இ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி, உடற் கல்வி இயக்குநர் எஸ்.முரளிதரன், உடற் கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், முரளி, சக்திவேல், முன்னாள் விளையாட்டு வீரர்கள் ரத்தினவேல், இளையராஜா, விஜயமீனாட்சி, கமல்ராஜ், ஜே கே.செந்தில்குமார், வினோத், ரவிவர்மராஜ், கே.கபிலன், பி.மணிகன்டன், பா.ஸ்ரீராம் பிரசாத் ஆகியோர் பாராட்டினர்.

    முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் ஆர்.குமரன் மற்றும் மோகன்தாஸ் உடனிருந்தனர். மயிலாடுதுறையை சார்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கார்த்தி (அமெரிக்காவில் வசிப்பவர்) பத்தாயிரம் மதிப்புள்ள 10 கால்பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை பால்கன்ஸ் அகாடமிக்கு வழங்கியுள்ளார்.
    சிறுதானியங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன
    சீர்காழி:

    சீர்காழியை சேர்ந்த நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் ரா.சுதாகர், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, சின்னசோளம், பனிவரகு ஆகிய எட்டு தானிய வகைகள் மட்டுமே சிறுதானியங்களாகும்.

    இதோடு சேர்த்து மரபு அரிசி இரகங்களான மாப்பிள்ளை சம்பா, போன்ற அரிசிகளையும் ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு முன்வரவேண்டும்.கடின உழைப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்களே அடிப்படையாகத் திகழ்ந்தன.

    இடையில் பசுமைப் புரட்சி என்ற பகட்டு ஆர்ப்பாட்டத்தால் சிறுதானிய புழக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவே அனைவருக்குமான உணவாக அடையாளப் படுத்தப்பட்டது.

    ஆகவே தான் உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரமின்றி பன்னோக்கு விவசாய அணுகுமுறையை மீட்டு எடுக்கவும் சிறுதானிய பயன்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரி வந்தனர். ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க அங்கன்வாடி, மதிய உணவுத்திட்டங்களில் சிறுதானிய உணவுகள் வழங்கிட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்களை வழங்கிட வேண்டும். சிறுதானியங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்திட, மாவட்ட அளவில் சிறுதானியக் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கபட்டன.

    ஆகவே, ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் முதலில் முன்னெடுத்தார்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நெல் மூட்டைகளை, அரசே கொள்முதல் செய்வதைப் போல சிறுதானியங்களையும் நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் ரசாயன உரங்களின் தேவையின்றி வளரக் கூடியவை சிறுதானியங்களை கொள்முதல் செய்வதற்கு முன்பு அதிலும் ஹைபிரிட் வகைகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால், அவற்றை முடிந்த வரை தவிர்த்து, நாட்டு வகைகளை கொள்முதல் செய்யவேண்டும்.

    சிறுதானியங்கள் பொதுவாக நார்ச்சத்து அதிகமானவை. மலச்சிக்கலை தவிர்க்க உதவும். கேழ்வரகில் கால்சியம் அதிகம். கம்பு உடல் வெப்பம் தணித்து தெம்பு தரும். இரும்பு சத்து நிறைந்தது. தினை உடலுக்கு நல்ல பலம் தரும்.சிறுதானியங்களில் அனைத்திலும்புரதம், விட்டமின்கள், மினரல்கள் அதிகம். கார்போ ஹைட்ரேட்டும், பைட்டிரிக் அமிலமும் குறைவு. 

    சாமை, குதிரைவாலி ஆகியவை எளிதில் ஜீரணமாகும். சத்து நிறைந்தவை.ஆகையால் தமிழ்நாடு முழுவதும் காலநிலைக்கேற்ப விவசாயிகளிடையே விழிப்புணர்வு செய்து சிறுதானியங்களையும் அதிகளவு பயிரிட அரசு ஊக்கபடுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி கீழதெரு பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாத 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுஉத்ஸவம் காப்பு கட்டி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் தொடர்ந்து காளி வேடமணிந்த பக்தர்கள், கரகம் ஆகியவற்றுடன் முக்கியவீதிகளின் வழியாக உலாவந்து கோவிலை அடைந்தனர். 

    கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீகுண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா நடைபெற்றது.
    சீர்காழியில் தரமற்ற அரிசி வினியோகத்தை கண்டித்து ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரேசன்கடை (எப்.சி.005) இயங்கி வருகிறது. இந்த கடையில் கோவிலான்தெரு, புளிச்சக்காடு, ஈசானியத்தெரு, மணக்குடிதெரு, சர்க்கான்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைகின்றனர். 

    சுமார் 1108 குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட இக்கடையில் எப்பொழுதும் அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில், கோதுமை வகைகள் வழங்கும்போது கூட்டம் அதிகளவு வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இந்த ரேசன் கடையில் சன்னரக அரிசிக்கு பதிலாக சில மாதமாக தரமற்ற குண்டு அரிசியை கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம். 

    சனிக்கிழமையும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அரிசி வாங்கிய மக்கள் அரிசி சமைக்க முடியாத அளவிற்கு தரமற்று இருந்ததால் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆத்திரம் தீராத மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    தகவலறிந்த குடிமை பொருள் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுதாகவும், இதனை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அதனை கடந்த சில மாதங்களாக வாங்காமல் வெளிசந்தையில் அதிகவிலை கொடுத்து அரிசி வாங்கி சமைத்து சாப்பிடும் நிலை உள்ளதாகவும், இனிவரும் நாட்களில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 27-ந்தேதி நடக்கிறது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. 

    தேவார பாடல் பெற்றதும், அபிராமி பட்டர் வாழ்க்கையில் அமாவாசையை பவுர்ணமி ஆக்கிய புராண நிகழ்வுகளும் உள்ளது. அஷ்ட வீரட்டேஸ்வரர் கோவில்களில் முதலாவது. 

    எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயருக்கு அனுகிரகம் செய்த தலம். 60,80,100, வயது திருமணங்கள் செய்து வருபவர்களுக்கு ஸ்தலம் ஆயுள் 
    விருந்தி தந்து அருள்பாலித்து வருகிறது.

    இக்கோவிலின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஒருவருட காலமாக பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் திருக்கடையூரில் கும்பாபிஷேக பணிகள் குறித்து தருமபுரம் ஆதீனம் 27&வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடியும் 
    தருவாயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 27-ந்தேதி காலை நடைபெறவுள்ளதாக கூறினார். 

    இதனை அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி 73 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அரசு வழிகாட்டு முறைகளின்படி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அப்போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    மயிலாடுதுறையில் தனியார் நர்சிங் கல்லூரி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பெரிய சாலியத்தெருவில் எஸ்.கே.ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. 

    அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவருக்குச் சொந்தமான இக்கட்டடத்தில் அசோக் என்பவர் 3 வருடங்களாக இக்கல்லூரியை நடத்தி வருகிறார்.

    இக்கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி நிர்வாகிகள் வழக்கம்போல் நர்சிங் கல்லூரியை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கட்டிடத்தின் முகப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால், கட்டிடத்தின் தகர மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் கல்லூரியில் மாணவிகள் உள்ளிட்ட யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுர ஆதீனத்தின் முன்பு பின்னணி பாடகர் வேல்முருகன் பாடல் பாடி ஆசி பெற்றார்.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் எழுந்தருள் பாலிக்கும் அணிகொண்ட கோதை அம்மன் உடனாகிய முல்லைவனநாதர் கோவில் 
    மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது முடிந்தது.

    இவ்விழாவில் பங்கேற்பதற்காக திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் வந்தார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்த பாடகர் வேல்முருகன், தருமபுரம் ஆதீனம் 
    27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த 
    பரமாச்சாரிய சுவாமிகள் சந்தித்து ஆசி பெற்றார். 

    அப்போது தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பக்தி பாடல்கள் சிலவற்றை பாடினார் வேல்முருகன். 

    தொடர்ந்து தருமபுரம் ஆதீனம், பாடகரை பாராட்டி பிரசாதங்களை வழங்கினார். 

    அப்போது கோவில் கண்காணிப்பாளர் செந்தில், அதிமுக இளைஞர் 
    மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ஜி.வி.என்.சுரேஷ் அ.தி.மு.க.வை சேர்ந்த துரை, பட்டதாரி ஆசிரியர் கோவி. நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    கொள்ளிடம் அருகே ரேசன் கடைக்கு தரமற்ற அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொண்ணங்காட்டுபடுகை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று இரவு 10 மணி அளவில் 
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு ஒரு லாரி மூலம் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. 

    அதனை லாரியில் இருந்து இறக்க முற்பட்டபோது, லாரியில் உள்ள அரிசி மூட்டைகள் தரமற்றதாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே ஊர்மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஒன்றுகூடி தரமற்ற அரிசியை ரேஷன் கடையில் இறக்கி மக்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்குவதை தடுத்து நிறுத்தினர். 

    தரமான அரிசி வழங்க வழங்க வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும். உரிய அதிகாரிகள் இங்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி லாரியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது இதுபோன்ற அரிசியை இந்த கிராமத்துக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து 
    லாரியில் கொண்டு வந்து அரிசியை திருப்பி எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கண்டனர். 

    இந்நிலையில் இரவோடு இரவாக லாரி மூலம் கொண்டு வரப்பட்ட தரமற்ற அரிசி திருப்பி அனுப்பப்பட்டது.
    ×