என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
11 பெருமாள்கள் தங்க கருட சேவை உத்ஸவம் - சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் நாராயணப்பெருமாள் கோயிலில் 11பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உத்ஸவம் பிப்2 புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதனிடையே சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சப் கலெக்டர் ஜி.நாராயணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.லாமெக்,வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமாள் வீதியுலா புறப்பாடு,வழிபாடு நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டும்,கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி நடராஜன்,கோயில் நிர்வாக அலுவலர் குணசேகரன் மீனாட்சி உதவி பெறும் பள்ளி செயலர் ரகுநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.ஆர்.ஏ. அன்பு மற்றும் விழா கமிட்டியினர்,விழா குழுவினர்கள் பங்கேற்றனர்.
Next Story






