என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீமிதி திருவிழாவில் காளிவேடமணிந்த பக்தர் தீமிதிக்கும் காட்சி.
    X
    தீமிதி திருவிழாவில் காளிவேடமணிந்த பக்தர் தீமிதிக்கும் காட்சி.

    பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி கீழதெரு பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாத 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுஉத்ஸவம் காப்பு கட்டி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் தொடர்ந்து காளி வேடமணிந்த பக்தர்கள், கரகம் ஆகியவற்றுடன் முக்கியவீதிகளின் வழியாக உலாவந்து கோவிலை அடைந்தனர். 

    கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீகுண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா நடைபெற்றது.
    Next Story
    ×