என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காலை பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இதில், பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், முதற்கட்ட விவசாரணையில் தெரிந்ததாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடி விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை, இந்த விபத்து குறித்து சிபிஐ., அல்லது என்ஐஏ., விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், பாராளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டதில் பட்டாசு குடோனால் வெடி விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் பல தரப்பினரும் மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று மாலை வெடி விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் வீட்டில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன சென்னை தலைமை அலுவலர் தலைமையிலான நான்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டை உள்பக்கம் தாளிட்டு கொண்டு, இறந்த ராஜேஸ்வரியின் கணவர், மகன், மருமகள், மகள் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது, சிலிண்டரால் வெடி விபத்து ஏற்படவில்லை என மனு அளித்துள்ளீர்கள். சிலிண்டரால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக உங்களை போலீசார் கூற சொல்கிறார்களா? இது குறித்து வேறென்ன தகவல்கள் உள்ளது என்ற கோணத்தில் சுமார் 30 நிமிட நேரம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசின் விசாரணைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அதிகாரிகளை தவிர்த்துவிட்டு மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
    • உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், உத்தனப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் தலைமையில் கடந்த வாரம் முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்ப பணிகள் உத்தனப்பள்ளி, லாளிக்கல், கொத்துர், கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

    அதில் ஒரு பகுதியான உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    • போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போதை தடுப்பு பிரிவு போலீசார் மத்திகிரி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த நரேன் தர்மன் (வயது38) என்ற வாலிபர் கையில் வைத்திருந்த பையில் 800 கிராம் கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.
    • பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழி யர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியில் முக்கியமான சாலையான ஒசூர்-பேரிகை சாலை, ஒசூர்-கிருஷ்ணகிரி சாலை, உள்ளது.

    இந்த சாலைகளில் அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் , அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், சார் பதிவகம் உள்பட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    இதனால் சாலையில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • தேவையான மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கான அனுமதியை டெல்லியில், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்று தருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா தலைமை தாங்கினர்.

    இதில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்த வும்,சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கான அனுமதியை டெல்லியில், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

    • 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 1, 2-வது வார்டிற்குட்பட்ட ஜூஜூவாடி , உப்கார் லேஅவுட், ஆபீசர் காலனி, திருவள்ளூர் நகர், ராஜாஜி நகர், காந்தி ரோடு, ஜெய்பீம் நகர், நேதாஜி நகர், எஸ்.எல்.வி.நகர், பி.டி.ஆர் நகர் பகுதியில் மண் சாலையை, தார் சாலையாக மாற்றும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும், மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.

    இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் அசோக் ரெட்டி, தரன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் தலைமை வகித்தார். மத்தூர் ஆண்கள் மேல்நிலைப் தலைமையாசிரியர் வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு, மாவட்ட குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட பொரு–ளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் 282 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவியாசிரியர்கள் சின்னதுரை, சின்ராஜ், முருகன், ரவி, சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

    • ஒரு வீட்டில் 2 உடும்புகள் (இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும்), கீரி மற்றும் மான் கொம்புகளை கண்டுபிடித்தனர்.
    • வனஉயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வனச்சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    குருபரப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்கிமேடு கிராம பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனபாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் முனியப்பன், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர்கள் ரவி, மூர்த்தி (வனபாதுகாப்பு படை) ஆகியோர் கொண்ட குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் 2 உடும்புகள் (இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும்), கீரி மற்றும் மான் கொம்புகளை கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக வன உயரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதே கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து (வயது45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சோதனையின் போது குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசாரும் உடனிருந்தனர். வனத்துறையினர் கூறும்போது, வனஉயிரினங்கள் வேட்டையாடுதல் தடுக்கும் வகையில், சிக்கரிமேடு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வனஉயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வனச்சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கெத்தனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சவுந்தர்யா (வயது19). இவர் நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் தனது மகளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கோவிந்தராஜ் தேடிபார்த்தார். எங்கு தேடியும் சவுந்தர்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவிந்தராஜ் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சவுந்தர்யாவை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி தேவசானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகள் நித்யா (19). இவர் நேற்று முன்தினம் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன தேவன் தனது மகளை உறவி–னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத–தால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தேவன் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நித்யாவை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த தொகரபள்ளியை சேர்ந்தவர் சாதிக். இவரது மகள் ஷீபா (21). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாதிக் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷீபாவை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று ஓசூரை அடுத்த மூக்காண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (29). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி ஆனந்த்குமார் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆனந்த்குமாரை தேடி வருகின்றனர்.

    • இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
    • எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையுடன் காணப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த வேடர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது23).

    கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன்காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரனெ்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
    • நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,  

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ தூரத்திற்கு சம்ருதி மகா மார்க் எக்ஸ்பிரஸ் சாலை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மூன்றாம் கட்டமாக தற்போது பர்வீர் கிராமத்தில் இருந்து தானேயில் உள்ள வால்பே வரை 100 கி.மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதில் 9 இன்ஜினியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த பணியின் ஒரு பகுதியாக சகாபூர் தாலுகாவில் உள்ள குதாடி சர்லாம்பே கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

    அவ்வாறு பலியானவர்களில், கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட

    வி.ஐ.பி நகரில் வசிக்கும் இளங்கோவன் மகன் இன்ஜினியர் சந்தோஷ்(வயது 36) ஒருவராவார். இவரது உடல் கடந்த 2ம் தேதி விடியற்காலை விமானம் மூலம் பெங்களூர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி கொண்டுவரபட்டு, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது கலெக்டர், சந்தோசின் மனைவியிடம், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என ரூபிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மேட்டுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் முபாராக் (வயது26). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    அந்த பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 21.4.2022-ந் தேதியன்று முபாராக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தருமபுரி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து முபாராக்கை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    ×