என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • அண்ணா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று அண்ணா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மாவட்ட அவை தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம். வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகர செயலாளர் நவாப், நகர் மன்ற தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், உட்பட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
    • மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில், பட்டாசு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசுக் கடைகளை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார்,வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அரசு வழிகாட்டு முறையில் பட்டாசுக் கடைகளை நடத்த வேண்டும் என விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஓசூர் அட்கோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள், வியாபாரிகளுக்கு அட்கோ போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் இதில், மின் வாரிய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டாசுக் கடைகளை அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

    மின் மீட்டர் பெட்டியை அறையின் உள்ளே வைக்காமல், வெளியே வைக்க வேண்டும். அப்போது தான் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர் சபரி வேலன் மற்றும் பட்டாசு கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.
    • அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக கால்நடைகள், கடைகள், வீடுகளில் திருடும் சம்பவம் நடந்து வந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார்தாகூர் உத்தரவிட்டார். அதன் பேரில், ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று காலை, சூளகிரி அருகே சின்னார் பகுதியில் சூளகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    சந்தேகமடைந்த போலீசார், அவர்களை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த சதீஸ் (வயது34), முஸ்லீம் தெருவை சேர்ந்த சாதிக் மகன் மகபூப் (21) ஆகிய இருவரும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 11 செல்போன்கள், நகை, கொலுசு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர், இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.  

    • நேற்று முதல் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • ஒன்னல்வாடி சென்று, அங்கிருந்து ஜொன–பெண்டா சாலை வழியாகவும், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள தேன்கனிக்–கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. இதை விரிவாக்கம் செய்யும் பணி, ரெயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கியது.

    அத்துடன், கர்நாடகாவில் இருந்து ஓசூர் வரை, ரெயில்வே பாதை அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இதனால் நேற்று முதல் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள், தேன்கனிக்கோட்டை சாலையில் செல்லாமல் தடுத்து, ரெயில்வே நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், தளி சாலையில் சென்று, அத்திவாடி ஜங்ஷனில் இடதுபுறமாக திரும்பி, மத்திகிரி கூட்ரோட்டை அடைந்து, அங்கிருந்து வேண்டிய பகுதிக்கு சென்றன.

    ஒன்னல்வாடி சென்று, அங்கிருந்து ஜொன–பெண்டா சாலை வழியாகவும், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    இந்த வாகன போக்குவரத்து மாற்றம் காரணமாக, ஓசூர் இன்னர் ரிங்ரோடு, ரெயில்வே சுரங்கப்பாதை, தளி சாலை போன்றவற்றில், நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இன்னும் 7 மாதங்களுக்கு இந்த வாகன போக்குவரத்து நடைமு–றையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
    • தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    நாகரசம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். குழந்தை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வாசவி முன்னிலை வகித்தார்.

    தேசிய பசுமை படை ஒன்றிய செயலாளர் ஆசிரியர் பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பவுன்ராஜ் பேசும் போது பிளாஸ்டிக் பைகளால் நமது நீர் நிலம் காற்று ஆகியவை மாசு அடைகின்றன. இதனால் எதிர்காலத்தில் பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு மிகவும் கடுமையான சூழல் உருவாகும். எனவே நாம் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஆசிரியர்கள் தேவராஜன், பெருமாள், ராஜேஸ்வரி ,கோப்பெரும் தேவி, ரேவதி, அருட்செல்வம், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
    • விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் உலக நன்மைக்காக மகா நவசண்டி யாகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், 28-வது ஆண்டு மகா நவசண்டி யாகம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள், கணபதி ஹோமம், பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கி, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் மற்றும் மகாதீபாராதனையும், சனிக்கிழமை அன்று முதற்கால மகா நவசண்டியாகம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் இரவு இரண்டாம் கால மகா சண்டி யாகமும் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று, கலசபூஜை, ருத்ர ஹோமம், துர்கா ஹோமம் லட்சுமி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மூன்றாம் கால மகா நவ சண்டி யாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பட்டாசுகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது.
    • பட்டாசுகளை பாதுகாப்பு இன்றி வைத்திருந்ததாக மனோகரன் (வயது 40), பிரேம்குமார் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள 2 கடைகளில் சோதனை செய்தபோது அதில் பட்டாசுகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பட்டாசுகளை பாதுகாப்பு இன்றி வைத்திருந்ததாக மனோகரன் (வயது 40), பிரேம்குமார் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

    • காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • விவசாயிகள் சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கை யுடன் காத்து உள்ளனர்.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாட்டம் - சூளகிரி சுற்று வட்டார பகுதியான் பேரிகை, கும்பளம், காளிங்காவரம், அத்தி முகம், புளியரசி, எ.செட்டிப்பள்ளி, பிளாலம், மைதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, சின்னார், காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பல பயிர்களை வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்தனர்.

    ஆனால் தற்போது மழை பெய்யாததால் செடிகள் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கை யுடன் காத்து உள்ளனர்.

    மழை பெய்யவில்லை என்றால் பயிர்வாடி மகசூல் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையில் உள்ளனர்.

    • அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.
    • கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணசிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சி பகுதிகளான கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ் தெரு, மூஸ்லீம் தெரு, கே.கே நகர், ஒசூர் பேரிகை சாலை பகுதி, அண்ணா நகர், கமலா காலனி, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதி, நெசவாளர் தெரு, மற்றும் பல பகுதி களில் குரங்குகள் தொடர்ந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    மேலும் குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சமையல் , காய்கறிகள், பழங்கள், உணவு ஆகிய வற்றை எடுத்து செல்கிறது.

    மேலும் வீட்டு தோட்டத்தில் செடிகள் எதுவுமே வளர்க்க முடியாத நிலை எற்பட்டு வருகிறது.

    இது மட்டும் இல்லாமல் அனைவரையும் கடிக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    • அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து நடனமாடினர்.

    வேப்பனப்பள்ளி.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரகுப்பம் கிராமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    காலை முதலே வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு வெண்ணை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்கள் முன்னிலையில் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆனந்த நடனமாடி ஆரோகரா கோஷத்துடன் முருகன் வள்ளி தெய்வாணை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து நடனமாடினர்.இந்த திருகல்யாணத்தில் கடவரப்பள்ளி காரக்குப்பம், நாச்சிகுப்பம், திம்மசந்திரம், பண்ணப்பள்ளி யானைக்கால் தொட்டி, ஜேடுகொத்தூர், கத்திரிப்பள்ளி வேப்பனப்பள்ளி, பூதிமுட்லு நாடு வனப்பள்ளி, தோட்டக்கணவாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

    • கவுதம் பஸ்வானும், அவரது நண்பர்கள் 2 பேருடன் நேற்று விடுமுறை நாள் என்பதால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர்.
    • ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    பீகார் மாநிலம் கவுத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் பஸ்வான் (வயது26). அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் நிரஞ்சன்குமார் (27), அசோக் சவுத்ரி (24).

    இவர்கள் 3 பேரும் ஓசூர் மூக்காண்டபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கவுதம் பஸ்வானும், அவரது நண்பர்கள் 2 பேருடன் நேற்று விடுமுறை நாள் என்பதால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது அவர்கள் பின்னால், அஞ்செட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரும் தனது மொபட்டில் வந்தார்.

    இரு தரப்பினரும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கவுதம் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் காயமடைந்த ஜெய்சங்கர், நிரஞ்சன்குமார், அசோக்சவுத்ரி ஆகிய 3பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதம்பஸ்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரை வரை தேடிவருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி அருகே படதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (60). இவர் நேற்று ஓசூர் அருகே சூளகிரிக்கு வந்தார். அப்போது அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ராஜம்மாள் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகலவறிந்த சூளகிரி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.
    • அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் கோவிலில் வாராகி அம்மனுக்கு ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு 136 கலச பூஜைகளும், 136 மகாயாக வேள்விகளும், உலக நன்மை வேண்டியும் குடும்ப நலனுக்காகவும் பெண்கள் பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து மகா வாராஹி அம்மனுக்கு மகா அபிஷேகமும் சர்வ அலங்காரத்துடன் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.

    அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இந்த விசேஷ பூஜைகளை ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் சபா குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

    ×