என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் சாவு
- கவுதம் பஸ்வானும், அவரது நண்பர்கள் 2 பேருடன் நேற்று விடுமுறை நாள் என்பதால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர்.
- ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது.
கிருஷ்ணகிரி,
பீகார் மாநிலம் கவுத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் பஸ்வான் (வயது26). அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் நிரஞ்சன்குமார் (27), அசோக் சவுத்ரி (24).
இவர்கள் 3 பேரும் ஓசூர் மூக்காண்டபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கவுதம் பஸ்வானும், அவரது நண்பர்கள் 2 பேருடன் நேற்று விடுமுறை நாள் என்பதால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது அவர்கள் பின்னால், அஞ்செட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரும் தனது மொபட்டில் வந்தார்.
இரு தரப்பினரும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்தவழியாக வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கவுதம் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஜெய்சங்கர், நிரஞ்சன்குமார், அசோக்சவுத்ரி ஆகிய 3பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதம்பஸ்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரை வரை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி அருகே படதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (60). இவர் நேற்று ஓசூர் அருகே சூளகிரிக்கு வந்தார். அப்போது அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ராஜம்மாள் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகலவறிந்த சூளகிரி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






