என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி பகுதியில் போதிய மழை இல்லாததால் வெயிலில் வாடும் பயிர்கள்
    X

    ஏ.செட்டிப் பள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் நிலக்கடலை செடிகள் வாடி இருப்பதை படத்தில் காணலாம்.

    சூளகிரி பகுதியில் போதிய மழை இல்லாததால் வெயிலில் வாடும் பயிர்கள்

    • காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • விவசாயிகள் சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கை யுடன் காத்து உள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாட்டம் - சூளகிரி சுற்று வட்டார பகுதியான் பேரிகை, கும்பளம், காளிங்காவரம், அத்தி முகம், புளியரசி, எ.செட்டிப்பள்ளி, பிளாலம், மைதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, சின்னார், காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பல பயிர்களை வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்தனர்.

    ஆனால் தற்போது மழை பெய்யாததால் செடிகள் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் சில நாட்களில் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கை யுடன் காத்து உள்ளனர்.

    மழை பெய்யவில்லை என்றால் பயிர்வாடி மகசூல் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையில் உள்ளனர்.

    Next Story
    ×