என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயம்
    X

    3 இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயம்

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கெத்தனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சவுந்தர்யா (வயது19). இவர் நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் தனது மகளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கோவிந்தராஜ் தேடிபார்த்தார். எங்கு தேடியும் சவுந்தர்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவிந்தராஜ் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சவுந்தர்யாவை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி தேவசானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகள் நித்யா (19). இவர் நேற்று முன்தினம் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன தேவன் தனது மகளை உறவி–னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத–தால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தேவன் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நித்யாவை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த தொகரபள்ளியை சேர்ந்தவர் சாதிக். இவரது மகள் ஷீபா (21). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாதிக் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷீபாவை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று ஓசூரை அடுத்த மூக்காண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (29). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி ஆனந்த்குமார் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆனந்த்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×