என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
    • தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கதோரண பெட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் இச்சிறுமியும் மகேந்திரமங்கலம் குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது.

    இதனால் சிறுமியை தருமபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.

    • கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக் குமார் தலைமை வகித்தார்.
    • வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ,வுமான கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    ராயக்கோட்டை,   

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொப்பகரை ஊராட்சி, மேடஅக்ரகாரம் ஊராட்சி, தொட்ட மெட்டரை ஊராட்சி லிங்கணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஊராட்சிகள் வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரு ம்மான கே.அசோக் குமார் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளரும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ,வுமான கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு வாக்குசாவடி பூத் வாரியாக பட்டியில் உடன் தேர்தல் பொருப்பாளர்களை நேடியாக ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராஜகோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பையன் முனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, துணை செயலாளர் முனுசாமி, கூட்டுறவு சங்க இயக்குனர் சீனிவாசன், முன்னால் ஊராட்சி செயலாளர் பெருமாள் பால்னாம்பட்டி ராஜா, கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

    • அலங்கரிபள்ளம் கிராமத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    கிருஷ்ணகிரி,  

    பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் கீழ் எருமாம்பட்டி ஊராட்சி சவுளூர் கிராமத்தில் ரூ.22.80 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் எருமாம்பட்டி குட்டூர் கிராமத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலை, கூரம்பட்டி தேனோமை நகர் அலங்கரிபள்ளம் கிராமத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    மொத்தம் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா பெரியசாமி, மாதவி முருகேசன், துணை தலைவர் அன்னகொடி அன்பரசு, கவுன்சிலர்கள் குமரவேல், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நிர்வாகிகள் தசரா, தம்பிதுரை, முருகன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதே போல காவேரிப் பட்டணம் ஒன்றியம் எர்ர அள்ளி ஊராட்சி ஹவுசிங் போர்டில் பல்நோக்கு மைய கட்டிடம் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படு கிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க உள்ளார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் விழா, மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா, நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாள் விழா வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 15-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளராகிய எனது தலைமையில் நடைபெறும் விழாவில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ண கிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரு மான அர.சக்கரபாணி கலந்து கொண்டு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார்.

    அன்றைய தினம் காஞ்சீபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியில் தமிழக அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க உள்ளார்.தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், புதிதாக நியமிக்கப் பட்டுள்ள அணிகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஜெகதேவியில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவது குறித்தும், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது குறித்தும், அணிகளின் தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    எனவே இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 40 பைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
    • கிளாசிபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார், நேற்று திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை கூட்டு ரோடு மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 40 பைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரன்(44) என்பவரை கைது செய்து, வேனை அரிசியுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அதை பெங்களூர் கிளாசிபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், குருபரப்பள்ளி அடுத்த எண்ணேகொல்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 32 பைகளில் 1.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்த அந்த வேனை ஓட்டி வந்த சுண்டேகுப்பம் முருகேசன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கோவிந்தராஜ்(எ)மெர்சல் என்பவர், கிருஷ்ணகிரி டேம், மணி நகர், செட்டிமாரம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அதை பெங்களூருக்கு எடுத்து சென்று அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்து, அரிசியின் உரிமையாளரான கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் என்கிற மெர்சல் என்பவரை தேடி வருகிறார்கள்.

    • 2018-ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு ரூ.1.80 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.
    • மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் செங்கழுநீர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஸ்குமார் (வயது30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எ.ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மணி கடந்த 2018-ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு ரூ.1.80 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ராணுவத்தில் பணியாற்றிய வந்து சதீஷ்குமார் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கடனை கேட்டு மணி கடன் வழங்கி–யதற்கு எந்த ஆவணமும் பெறாமல் நம்பிக்கையின் பெயரில் கொடுத்ததாகவும், பணத்தை தராமல் ராணுவ வீரர் இழுத்தடிப்பதாகவும் அதனால் அதற்கான ஆதாரமாக ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதீஸ்–குமார் வீட்டில் இல்லாத பொழுது மணி அவரது வீட்டில் இருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு சென்ற–தாக தெரிகிறது. அந்த கைப்பையில் ராணுவ வீரர்க–ளுக்கான அடையாள அட்டை இருந்ததாகவும், அதனை மீட்டு தர வேண்டும் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்–குமார் தாக்கூரிடம் மனு அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் கல்லாவி போலீசார் விசாரணை நடத்தியதில் மணி, ராணுவ வீரர் சதீஸ்–குமாரின் அடையாள அட்டையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பைனான்ஸ் உரிமையாளர் மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இலவச சைக்கிள்களை மதியழகன் எம்எல்ஏ., வழங்கினார்.
    • 450 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மதியழகன் எம்எல்ஏ., வழங்கினார். கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை செரின் வரவேற்புரையாற்றினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று, 450 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலா ளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலா \ளர் தனசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நிர்வாகிகள் அன்பரசன், ஜெயேந்திரன், சென்றாயன், கலையரசன், டாக்டர்.திருவளவன், சாம்ராசு, மாதேஸ்வரன், பொன்னு கான், வீராசாமி, சீனிவாசன், தங்கராஜ், ராஜசேகரன், சவுகத்அலி, சங்கர் மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி லட்சுமி (வயது40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் மகள் வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது பெற்றோருக்கு தெரி யாமல் காதல் திருமணம் செய்து கொண்டதால், லட்சுமி மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே பூபட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம்.

    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீர் ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மலையாண்டஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டிற்கு உட்பட்ட அந்திவாடி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுசுவர் மற்றும் பல்நோக்கு கூடம் கட்டுப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு , சமைய லறைக் கூடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பல்நோக்கு கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
    • பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் கடும் சர்ச்சைக்குள்ளானது. பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.,வின் தோழமைக் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதே போல், சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். எனவே அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வினர் ஹிந்து சமய அறநிலை யத்துறை அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்–டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி, கிருஷ்ண–கிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் துணை போலீஸ் சூப்பி ரண்டு தமிழரசி தலைமையி லான போலீசார், ஆர்ப்பாட்–டத்திற்கு அனுமதி இல்லை யெனக் கூறி அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.

    ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதி இல்லை எனக் கூறிய பா.ஜ.க-வினர் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சிலர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி னர். இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கலைகோபி, பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நகர தலைவர் சங்கர் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில், சென்னை சாலை உள்ள வெள்ளக்குட்டையில் அமைந்துள்ள நாகம்மன் கோவில் மஹா கும்பா பிஷேகம் நடந்தது. இதை யொட்டி கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி, முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.

    நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு 48 பால் குடங்களை ஊர்வ லமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    10 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், நாகத்தம்மன் மூலமந்திர ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. 11 மணிக்கு கலசங்கள் புறப்ப டுதல் மற்றும் அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல் ஆகிய வை நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.

    ×