என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் 15-ந் தேதி  மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா  மதியழகன் எம்.எல்.ஏ. அறிக்கை
    X

    வரும் 15-ந் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மதியழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

    • அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் விழா, மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா, நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாள் விழா வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 15-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளராகிய எனது தலைமையில் நடைபெறும் விழாவில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ண கிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரு மான அர.சக்கரபாணி கலந்து கொண்டு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார்.

    அன்றைய தினம் காஞ்சீபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியில் தமிழக அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க உள்ளார்.தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், புதிதாக நியமிக்கப் பட்டுள்ள அணிகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஜெகதேவியில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவது குறித்தும், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது குறித்தும், அணிகளின் தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    எனவே இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×