என் மலர்
கிருஷ்ணகிரி
- சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சா அமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் , புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் , காந்தி நகர் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் , இதே போல் டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராசு வீதியில் உள்ள மஹா கணபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த பூஜையின் போது அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சாஅமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் விழாவையொட்டி, ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விநாயகர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் போலீசார் அனுமன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசார ணையில் அவரது பெயர் ரகுபிரசாத் (19), என தெரிய வந்தது- அவரை கைது செய்தனர். அதே போல பர்கூர் அச்சமங்கலம் அருகே நின்ற நபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது-. இதை யடுத்து அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் ராமமூர்த்தி (24), பர்கூர் அருகே உள்ள கனமூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீ சார் கண்கா ணித்தனர். அந்த வகையில் கிருஷ்ண கிரி, ஓசூர், தேன்கனிக கோட்டை, ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பேரிகை, ராயக்கோட்டை, ஊத்தங்க ரை, சிங்காரப்பேட்டை பகுதியில் குட்கா விற்பனை செய்ததாக 4 பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, பர்கூர், நாகர சம்பட்டி, சிங்கா ரப்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1400 பறிமுதல் செய்தனர்.
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- தூக்கிவீசப்பட்ட கவியரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பிள்ளாகொட்டாள் கிராத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கவியரசன் (வயது19). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தொகரப்பள்ளிக்கு வந்தார். மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே உள்ள காட்டுபகுதி சாலையில் செல்லும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட கவியரசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவியரசன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இந்த கன மழையால் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்த நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மழை நீர் வடிகால் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலையின் உயரத்தை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டதால் மழை நீர் முழுமையாக வடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளனார்.
விடிந்து காலை 8 மணி ஆகியும் நீரினை வெளியேற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
- மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.
- போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ராகிமான பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது40). விவசாயியான இவரது தோட்டத்தில் மின் மோட்டாருக்கு பொருத்தக் கூடிய 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.
அப்போது அங்கு வந்த முருகன் அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், பாம்புகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து (24), குருப–ரப்பள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் (22) ஆகிய 2 பேர் மின்வயரை திருடியது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
- மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார்.
- பெருமாள் என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயநாத் (வயது28). ஏ.சி. மெக்கானிக்கான இவரது வீட்டில் லேப்-டாப்பை வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயநாத், மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நோதாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (23) என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
- ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது.
- ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருரப்பள்ளி அருகே மேலுமலை தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது. அப்போது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கத்தில் திரும்பி யதால் கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் பின்னால் வந்த லாரியும் காரில் மோதியது.
இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டனர்.
அதேபகுதியில் விபத்து நடந்த, அடுத்த சில நிமிடத்தில் ஓசூர் - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 3 லாரி, 6 கார்கள் அடுத்த டுத்து ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் காயம டைந்தனர்.
விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார், இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்து, வாகனங்களை அப்புறப்படுத்தினர்.தேசிய நெடுஞ்சாலையில் அடுத்த டுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் சுமார், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து சீரான நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
- கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றித–ழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூ ரியில், தமிழாய்வுத்துறை சார்பில், 115-வது அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கல்லூரி–யின் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர், மாணவர்களிடம் அறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய தாரக மந்திரத்தை சுட்டிக்காட்டியும், அண்ணா வின் கல்வி சிறப்பு கள் மற்றும் பேச்சாற்றல் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். முன்ன தாக, தமிழ் ஆய்வுத் துறைத் தலைவர் லட்சுமி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, ஊத்தங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்று அண்ணாவின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, மாணவர்க–ளுக்கு அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறும்ப–டமாக காண்பிக்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி, மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்–பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றித–ழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
முடிவில், தமிழ் ஆய்வுத் துறை உதவி பேராசிரியர் அரவிந்த் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை, தமிழ் ஆய்வுத் துறையின் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.
- பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாசில்லா பசுமை வழி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் தலைமை ஏற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தியின் போது அரசின் நெறிமு றைகளை கடைபிடிக்க வேண்டும். களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பையை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும். உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் மகேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் மகேந்திரன், ஓசூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.
- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர்,
காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. சர்க்கிள் அருகே போராட்டம் நடத்திய அவர்கள், கர்நாடக எல்லை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மேலும் நல்லா கவுண்டர், கணேஷ் ரெட்டி உள்பட பலர் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் திடீரென்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் திணறினர். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
- 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி செயின்ட் அகஸ்டின் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களை நன்னெறிப் படுத்தவும் அயராது உழைக்கும் பள்ளி ஆசிரி யர்களை பாராட்டும் வகையில், இப்பள்ளியில் பணியாற்றும் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.895 மதிப்பிலான பிளாஸ்க் குகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700 மதிப்பிலான பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகை யில், ஆசிரியப் பெருமக்கள் மேன்மேலும் தங்கள் பணியில் சிறப்புற்று விளங்கி மாணர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் பணியை செம்மையாக செய்ய வேண்டும் என்றார்.
இதே போல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான ஸ்டோரேஜ் பாக்ஸ், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகளை 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள், கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் என மொத்தம் ரூ.3.72 லட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்தினார். இதுவரை ஆசிரியர்களை பாராட்டி ஊக்கப்பரிசாக ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






