என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.3.72 லட்சம் மதிப்பில் பரிசுகள், தங்க நாணயங்கள் : ஐ.வி.டி.பி. நிறுவனர் வழங்கினார்
- ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
- 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி செயின்ட் அகஸ்டின் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களை நன்னெறிப் படுத்தவும் அயராது உழைக்கும் பள்ளி ஆசிரி யர்களை பாராட்டும் வகையில், இப்பள்ளியில் பணியாற்றும் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.895 மதிப்பிலான பிளாஸ்க் குகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700 மதிப்பிலான பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகை யில், ஆசிரியப் பெருமக்கள் மேன்மேலும் தங்கள் பணியில் சிறப்புற்று விளங்கி மாணர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் பணியை செம்மையாக செய்ய வேண்டும் என்றார்.
இதே போல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான ஸ்டோரேஜ் பாக்ஸ், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகளை 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள், கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் என மொத்தம் ரூ.3.72 லட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்தினார். இதுவரை ஆசிரியர்களை பாராட்டி ஊக்கப்பரிசாக ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






