என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசை கண்டித்து தமிழக-கர்நாடாக எல்லையில் விவசாயிகள் மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு-பரபரப்பு
    X

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை படத்தில் காணலாம்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசை கண்டித்து தமிழக-கர்நாடாக எல்லையில் விவசாயிகள் மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு-பரபரப்பு

    • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஓசூர்,

    காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. சர்க்கிள் அருகே போராட்டம் நடத்திய அவர்கள், கர்நாடக எல்லை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மேலும் நல்லா கவுண்டர், கணேஷ் ரெட்டி உள்பட பலர் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தமிழக விவசாயிகள் திடீரென்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் திணறினர். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×