என் மலர்
கிருஷ்ணகிரி
- அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது36).
கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ராயக் கோட்டை-ஓசூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜீத்மூலி (24). இவர் ஓசூர் அருகே உள் ள பாகலூரில் தனியார் கம்பெனியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரும் பாகலூரைச் சேர்ந்த சோம–லிங்கப்பா (40) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் பாகலூர்-மல்லூர் சாலை யில் வந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்–சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜீத் மூலியை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சோம லிங்கப்பா தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் தொடர்பாக நிபுணர்கள் வந்து சிகிச்சைகள் அளித்தனர்.
குருபரப்பள்ளி,
ஓசூர் செயின்ட் பீட்டர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குந்தாரப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் அளித்தனர். இதில் பொது மருத்துவம், எலும்பியல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் தொடர்பாக நிபுணர்கள் வந்து சிகிச்சைகள் அளித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் குந்தாரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.
ஓசூர்,
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் ஐதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக ஓசூரில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சுமார் 600 விநாயகர் சிலைகள் இன்று நிறுவப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மிகப் பிரமாண்டமாக பெரிய விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஓசூரில் சிவசேனா கட்சியின் யுவசேனா அணி சார்பில், பழைய வசந்த் நகர் பகுதியில், ஓசூர் கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.
முகப்பு வாச லில் நாகபுற்று வடிவமைக்கப்பட்டு அதில் இருந்து தீயுடன் வெளியே வரும் நாக தேவதையும், சிங்கத்தின் அருகே நின்று கண் இமைத்து பார்க்கும் அம்மன் சிலை, பூஜைகள் செய்யும் பூசாரி சிலை, கர்ஜிக்கும் சிங்கம் மற்றும் முருகன், விநாயகர் ஆகிய தெய்வங்கள் என விநாயகர் சதுர்த்தி விழாவை காண வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக பிரமாண்ட செட் அமைக்கப் பட்டுள்ளது.
உள்ளே, நாக தேவதை யின் மடியில் அமர்ந்து கண் சிமிட்டி, காதுகளை அசைத்து பக்தர்களுக்கு அருள் வழக்கும் வகையில் பாலபூர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகரை தரிசித்து வெளியே வரும் பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.
மிக வித்தியாசமான வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை பொது மக்கள் நீண்ட வரிசையில் சென்று வியப்புடன் பார்த்து ரசித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் சிலைகள் முன்பு ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த பிரமாண்டமான செட்டை சுற்றி விழிப்பு ணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பெற் றோர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது பக்தர்களுக்கு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பில் விநாயகருக்கு ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவசேனா கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் முரளி மோகன் கூறுகையில், "சுமார் 20 லட்சம் செலவில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சனா மற்றும் சந்திரமுகி - 2 ஆகிய படங்களின் ஆர்ட் கலை ஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரங்கின் உள்ளே பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. வருகிற ஞாயிற்றுக்கிழமை (24-ந் தேதி) வரை நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரியை நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி ஊராட்சி நரால்சந்தம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த போர்டு ஒன்றை கிராம மக்கள் வைத்துள்ளனர்.
இதனை மறைக்கும் விதமாக சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் விநாயகர் ஆலயம் என்ற போர்டு ஒன்றை வைத்துள்ளனர்.
இதற்கு நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் போர்டு வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் மத்தூர் போலீசார் ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புதியதாக போர்டு அமைக்க அனுமதி அளித்த நிலையில் அதிகாரியை நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. உடனே பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர்.
- டீசல் திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி அருகே வீட்டின் முன்பு தனியார் பள்ளியின் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த பகுதியில் கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து 3 பேர் இறங்கி வந்தனர். அவர்கள் கையில் பெரிய டீசல் பிடிக்கும் கேன் ஒன்றை கொண்டு வந்து தனியார் பள்ளி பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர். பின்னர் அந்த 3 பேரும் அவர்கள் வந்த காரில் மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. அதில் மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கி டீசல் திருடும் காட்சிகள் அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனியார் பள்ளி வாகனங்களில் டீசல் திருடு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
- இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் வெங்கடதாம்பட்டி புதூர் வரை சுமார் 1½ கி.மீ தொலைவில் செல்லும் தார்சலையை கடந்த 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையை வெங்கடதாம்பட்டி மற்றும் அதன் வழி உள்ள வெங்கடதாம்பட்டி புதூர், சோளக்கப்பட்டி, படபள்ளி, படப்பள்ளி புதூர், புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
சாலை வழியாக பஸ் வசதி குறைவாகவே இருப்பதால் அனைவருமே இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி தான் நகர்புறங்களுக்கு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் மருத்துவம்,கல்வி போன்ற வற்றிக்காகவும் ஊத்தங்கரை வரை செல்ல இந்த சாலையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்த சாலை பழுதானதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தார்சாலையை சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
- ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கவிதா (23). இவர்கள் கடந்த 10.10.2022 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கவிதாவை அவரது தாத்தா வீட்டில் முகமது விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா தனது கணவருடன் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா, நேற்று முன்தினம் பத்தலப்பள்ளியில் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
- உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன், துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நாகராசன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், பேரூர் கழக செயலாளர் ஜே.கே.எஸ்., பாபு, அன்பரசு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஜேயேந்திரன், கவுன்சிலர் செந்தில், மகளிரணி புஷ்பா, கனல் சுப்பிர மணி, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
- சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சா அமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் , புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் , காந்தி நகர் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் , இதே போல் டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராசு வீதியில் உள்ள மஹா கணபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த பூஜையின் போது அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சாஅமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் விழாவையொட்டி, ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விநாயகர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் போலீசார் அனுமன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசார ணையில் அவரது பெயர் ரகுபிரசாத் (19), என தெரிய வந்தது- அவரை கைது செய்தனர். அதே போல பர்கூர் அச்சமங்கலம் அருகே நின்ற நபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது-. இதை யடுத்து அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் ராமமூர்த்தி (24), பர்கூர் அருகே உள்ள கனமூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீ சார் கண்கா ணித்தனர். அந்த வகையில் கிருஷ்ண கிரி, ஓசூர், தேன்கனிக கோட்டை, ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பேரிகை, ராயக்கோட்டை, ஊத்தங்க ரை, சிங்காரப்பேட்டை பகுதியில் குட்கா விற்பனை செய்ததாக 4 பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, பர்கூர், நாகர சம்பட்டி, சிங்கா ரப்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1400 பறிமுதல் செய்தனர்.
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- தூக்கிவீசப்பட்ட கவியரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பிள்ளாகொட்டாள் கிராத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கவியரசன் (வயது19). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தொகரப்பள்ளிக்கு வந்தார். மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே உள்ள காட்டுபகுதி சாலையில் செல்லும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட கவியரசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவியரசன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இந்த கன மழையால் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்த நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மழை நீர் வடிகால் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலையின் உயரத்தை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டதால் மழை நீர் முழுமையாக வடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளனார்.
விடிந்து காலை 8 மணி ஆகியும் நீரினை வெளியேற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






