என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் உலக ஓசோன் தின நினைவாக மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்த காட்சி.
அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின கொண்டாட்டம்
- பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.
மத்தூர்,
ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் மிக சிறப்பாக கொண்டாடபட்டது.
இவ்விழாவில் மாண வர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.
இவ்விழாவிற்க்கு அதிய மான் கல்வி நிறு வனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கி ஓசோனின் முக்கிய துவத்தை எடுத்து ரைத்து மாணவர்க ளிடம் உரையாடினார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகு மார் மற்றும் துணைமுதல்வர் அபிநயா கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக ஓசோன் தின நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.






