என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகன் சதாம் உசேன் (33). இவர் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கம்பனி நடத்தி வந்தார்.

    கடந்த 19-ந் தேதி இரவு இவர் 7.30 மணி அளவில் கம்பெனியை பூட்டி விட்டு திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சதாம்உசேன் பலியானார். அதேபோல அருகில் இருந்த மோட்டார் சைக்கிள்கள், மின்கம்பம் மீது பஸ் மோதியதில் அவை சேதமடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் அங்கு சென்று சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பஸ்சுக்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ வைத்தனர். இதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனது.

    இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் பஸ்சை எரித்த வழக்கில் ஊத்தங்கரை அவ்வை நகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (33), சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டியை சேர்ந்த சூர்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மணிவண்ணன் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். விபத்தில் இறந்த சதாம்உசேன் இவர்களின் நண்பர்கள் ஆவார்கள். விபத்தில் இவர்களின் நண்பர் இறந்ததால் ஆத்திரத்தில் பஸ்சை எரித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
    • மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.

    இதனால் சிவானந்தம் மனைவி தனம் கோபித்துக் கொண்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைச்சந்து கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை அங்கு சென்ற சிவானந்தம், மனைவியின் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார்.
    • அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் கட்சி பணியாற்றிட வேண்டுமென எடுத்து ரைத்தார்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க.சார்பில் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். இதில் களர்பதி, மேக்கலாம்பட்டி, மலையாண்டஅள்ளி உள்ளிட்ட வாக்குசாவடி முகவர்களை சந்திந்தும், உறுப்பினர் படிவங்களை கிளை வாரியாக ஆய்வு செய்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் ஒருங்கிணைந்து கட்சி பணியாற்றிட வேண்டு மென எடுத்துரைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க ஒன்றிய இணை செயலாளரும், களர்பதி ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயந்தி புகழேந்தியிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், அ.தி.மு.க.வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், சிவம் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், முன்னால் கவுன்சிலர் முனியம்மாள் கந்தசாமி ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, பிரகாஷ், கிளை செயலாளர்கள் கே.பி.விஜியன், மதியழகன், கணேசன், ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர் மாதப்பன் நாயுடு, குமுதா, சுஜாதா, ஜெயா, ரேவதி, ஜெயலட்சுமி, விஜிய லட்சுமி,நிவேதனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
    • தனது சொந்த நிதியில் இருந்து மதியழகன் எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் அருகே உள்ள ஜிகினிகொல்லை கிரா மத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது வீடு கடந்த 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்றார்.

    அங்கு கண்ணம்மாளை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசிடம் இருந்து தேவையான உதவிகளை தேவையான உதவிகளை பெற்று தருவதாக மதியழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

    அப்போது மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • பணிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    அதை யொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா கிருஷ்ண கிரியில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறுகிறது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கந்திகுப்பம் மாணிக்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மிட்டப்பள்ளி பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் மற்றும் சிக்கன் ரைஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த 150 தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். அனைவரும் சாப்பிட்ட நிலையில் பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி இருந்துள்ளது.

    இதில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு 26 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இரவு சாப்பிட்ட சிக்கன் ரைஸ் அதில் இருந்த சிக்கன் காலாவதியானதா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் அதன் தொடர் சம்பவமாக சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் உணவகங்கள் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்த நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். ஆனாலும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.
    • விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பர்கூர்:

    சென்னையில் இருந்து நெகிழிப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டு இருந்தபோது, அப்போது இந்த லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் டிரைவர், வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சரவணன் (வயது28), அதே பகுதியை சேர்ந்த கிளீனர் விசுவநாதன்(48) ஆகிய 2 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து விபத்தில் பலியான சரவணன், விசுவநாதன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஊத்தங்கரை, மத்தூர், கல்லாவி ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கனமழை காரணமாக ஊத்தங்கரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி அலுவலகம் எதிரே தனி நபர் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேறும் பாதை இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. அந்த தண்ணீர் வடிந்து செல்வதற்கான வழியில்லாமல் அதில் கொசுக்கள் புழு உற்பத்திய செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த தண்ணீர் தேங்கத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் சாலையை கடப்பது மிக சவாலாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கிய பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லாமல் எதிர் திசையில் செல்லக்கூடிய ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் பாதையை அடைத்துள்ள பகுதியை உடனடியாக சரி செய்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1,300 விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
    • அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நீர்நிலை களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் 400 சிலைகள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதி களில் 900 சிலைகள் என மொத்தம் 1,300 விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இதில், கிருஷ்ணகிரி நகர, ஒன்றிய இந்து முன்ன ணி மற்றும் விஎச்பி சார்பில் 28 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான இன்றும் , 5-வது நாளான 22-ம் தேதியும் பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும், 7-வது நாளான 24-ம் தேதி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநா யகர் சிலை களையும் ஊர்வ லமாக எடுத்துச் கிருஷ்ண கிரி சென்று அணையில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக போலீசார் சார்பில் கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் பாது காப்பு முன்னேற்பாடு பணி கள் செய்யப்பட்டுள்ளன. அணைப் பகுதியில் மின்னொளி, கண்காணிப்பு பந்தல், அணையின் கரைப் பகுதியில் தடுப்புகள் (பேரிகார்டு) உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மேலும், கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகளைப் பாதுகாப்பாக கரைக்க காவல்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும். சிலை யை கரைக்க 3 அல்லது 4 பேர் மட்டும் செல்ல வேண்டும். சிறுவர்கள் மற்றும் பெண்கள் தண்ணீ ரில் இறங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதே போல, விநாயகர்சிலைகள் கரைக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீராதா ரங்களில் அந்தந்த பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணி களை ஈடுபட்டு வருகின்ற னர்.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, 593 பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை பயனாளிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து, உயர் கல்வி படிக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, இன்று நடை பெற்ற இந்த சிறப்பு முகாமில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 593 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத்தொகை ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ் நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைகளின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக் கிற்கு நேரடியாகவோ அல்ல து காசோலையாகவோ வழங்கப்படும்.

    தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று உயர்கல்வி பயன்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் சமுக நல அலுவலக களப்பாணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புர்ணவு மேற்கொண்டு புதிய பயனா ளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும் மற்றும் இத்திட்டம் தொடர்பாக ஏற்பாடும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.

    மத்தூர்,  

    ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் மிக சிறப்பாக கொண்டாடபட்டது.

    இவ்விழாவில் மாண வர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.

    இவ்விழாவிற்க்கு அதிய மான் கல்வி நிறு வனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கி ஓசோனின் முக்கிய துவத்தை எடுத்து ரைத்து மாணவர்க ளிடம் உரையாடினார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகு மார் மற்றும் துணைமுதல்வர் அபிநயா கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக ஓசோன் தின நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

    • காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.

    மத்தூர்:

    ஊத்தங்கரை அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பள்ளி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு ஒரு தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது அந்த பஸ்சில் சில மாணவர்கள் இறங்கி வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் பஸ் அங்குள்ள பணிமனை அருகே வந்தபோது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அப்போது சாலையில் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மீது மோதி சாலையின் ஓரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி, அதற்கு அடுத்தப்படியாக இருந்த வீட்டின் சுவர் மோதி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தனியார் பள்ளி பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பலத்த காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊத்தங்கரையை அடுத்த மகனூர்ப்பட்டியைச் சேர்ந்த வரதராஜ் மகன் கோவிந்தராஜ் என்பவர் தனியார் பள்ளி பஸ்சின் டிரைவர் ஆவார். இவரின் அலட்சியத்தால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிரிழந்தவர் ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலரான அப்துல் சலாம் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பதும் தெரியவந்தது.

    அதிர்ஷ்டவசமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்தபோது எதிரே கனரக வாகனங்கள் ஏதும் வராததால், பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், வண்டியில் இருந்த பள்ளி குழந்தை அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்சை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போலீசார் ஊத்தங்கரை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ்சுக்கு தீ வைத்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது தீ பஸ் முழுவதும் பற்றி எரிந்து நாசமானாது.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், தனியார் பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×