search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்கா கடத்தி வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    குட்கா கடத்தி வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பி ஓட்டம்

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×