என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் வீட்டை இழந்த பெண்ணுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
- 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
- தனது சொந்த நிதியில் இருந்து மதியழகன் எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் அருகே உள்ள ஜிகினிகொல்லை கிரா மத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது வீடு கடந்த 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கு கண்ணம்மாளை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசிடம் இருந்து தேவையான உதவிகளை தேவையான உதவிகளை பெற்று தருவதாக மதியழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
அப்போது மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.






