என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

     வாக்குசாவடி உறுப்பினர் படிவங்களை ஆய்வு செய்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தென்னரசு வழங்கிய காட்சி.

    அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம்

    • கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார்.
    • அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் கட்சி பணியாற்றிட வேண்டுமென எடுத்து ரைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க.சார்பில் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். இதில் களர்பதி, மேக்கலாம்பட்டி, மலையாண்டஅள்ளி உள்ளிட்ட வாக்குசாவடி முகவர்களை சந்திந்தும், உறுப்பினர் படிவங்களை கிளை வாரியாக ஆய்வு செய்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் ஒருங்கிணைந்து கட்சி பணியாற்றிட வேண்டு மென எடுத்துரைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க ஒன்றிய இணை செயலாளரும், களர்பதி ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயந்தி புகழேந்தியிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், அ.தி.மு.க.வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், சிவம் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், முன்னால் கவுன்சிலர் முனியம்மாள் கந்தசாமி ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, பிரகாஷ், கிளை செயலாளர்கள் கே.பி.விஜியன், மதியழகன், கணேசன், ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர் மாதப்பன் நாயுடு, குமுதா, சுஜாதா, ஜெயா, ரேவதி, ஜெயலட்சுமி, விஜிய லட்சுமி,நிவேதனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×