என் மலர்
கிருஷ்ணகிரி
- கெலமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமத்துவ விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
- இஸ்லாமியார்கள், கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் போலீஸ் காலனி அருகில் கெலமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் மும்தாஜ் அசேன் சார்பில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சமத்துவ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப் பட்டது.
இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த சமத்துவ விநாயகர் சிலையை நேற்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முஸ்லிம்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர்.
பின்னர் கிரேன் மூலம் டிராக்டரில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சின்னட்டியில் உள்ள சனத்குமார் நதியில் பூஜைகள் செய்து விசர்ஜனம் செய்யபட்டு மேலும் அன்ன தானம் வழங்கபட்டது. இதில் தி.மு.க நகர கிளை செயலாளர் நஜிர் பாஷா ,அக்ரம், ராஜு, ரமேஷ், ஆனந்த், முனிராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜீவா, நகர் கணேஷ்காலனி, வாணியர் தெரு, நேதாஜி நகர், ஜிபி ஆகிய பகுதிகளிலும் வைத்திருந்த 6 விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து டிராக்டரில் அமர்த்தி மேளதாளங்கள் முழங்க ,தாரை, தப்பட்டை ஒலிக்க, ஆடல் பாடலும் பக்தர்கள் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று சனத்குமார் நதியில் விசர்ஜனம் செய்தனர் .பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கபட்டது.
கெலமங்கலம் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் வருவாய் ஆய்வாளர் மாரப்பா, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சு நாத், மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.
- ஒசூர் வனக்கோட்டத்தில் 4.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மதியழகன் எம். எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- 100 பேருக்கு டார்ச் லைட் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் தரம் குன்றிய காடுகளை மேம்ப டுத்த நபார்டு திட்டத்தின் மூலம், 4 லட்சத்து, 20 ஆயிரம் மரக்கன்றுகளை காப்புக்காடு களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி வனச்சர கம், தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மதியழகன் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி வனச்சரகம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பர்கூர் சுற்று வட்டாரங்களில், யானைகள் நடமாட்டம் உள்ள காப்புக்கா டுகளை ஒட்டியுள்ள விவசாயி களுக்கு இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறை மூலம் வழங்கப்பட்ட, டார்ச் லைட்டுகளை, 100 பேருக்கு வழங்கினார்.
ஒசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனவர்கள் சம்பத்குமார், வெங்கடாசலம், பிரவின்ராஜ், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்த லைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
அதேபோல யானைகள் நடமாட்டம் குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்ப தின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், உதவி வனப்பாதுகாவலர் (ஓய்வு) சிவாஜி, வனச்சரக அலுவலர் பாபு (ஓய்வு) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்கள்.
- தடுப்பணைக்கு குளிக்க சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்னமல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(வயது15). 6ம் வகுப்பு வரை படித்த இவர், பெற்றோரை இழந்த நிலையில் தன் தாத்தா முருகன் என்பவரது வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று மாலை சத்யா மற்றும் அவரது தோழிகள் இருவருடன் சின்ன மல்லப்ப ாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் வனப்பகுதியை ஒட்டி யுள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்துள்ளது. அதில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிறுமி சத்யா தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது தோழில்கள் கூச்சலிட்டவாறு அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து தேடினர்.
பின்னர், இது குறித்து பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த கிடந்த சத்யாவை சடலமாக மீட்டனர்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஒசூரில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்- தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில்:-
வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ண கிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளை யாட்டு துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலி னுக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இதில். கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகி கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வரவேற்பு ஏற்பாடு கள் குறித்தும் விரிவாக பேசினார்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட, மாநகர, நிர்வாகி கள் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
- சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
- பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூ ராட்சியில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலை மையில், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, மருத்துவ மேற்பார்வையாளர் ஸ்ரீதர், சுகா தார மேற்பார்வையாளர் சிவ குருநாதன், கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், இளங்கோ, நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் நடே சன் ஆகியோர் கொண்ட குழுவினர் 18 வார்டுகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
டெங்கு கொசுபுழு பரவும் இடங்களை ஆய்வு செய்து, பேரூராட்சி வாகனம் மூலம் பழைய டயர்கள் அகற்றி கொசுப் புழு பரவல் தன்மை கொண்ட இடங்க ளை வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் கொசுப்புழு பணியாளர்களுக்கு கொசுப்புழு கட்டுப்படுத்தும் முறை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் பணியா ளர்களுக்கு குளோரினேசன் செய்யும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
- தரமில்லாத உணவுகள் விற்பனை செய்யும் உணவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பர்கூரில் உள்ள 81 உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பி ல் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி துரித உணவகத்தில் கடந்த 18-ந் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதில் 14 பேர் நலமுடன் வீடு திரும்பினர். 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பர்கூர் பேரூராட்சி யில் உள்ள 81 உணவகங்கள், துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெட்டு போன இறைச்சி, சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் இருந்து 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும், மாவட் டத்தில் உள்ள அனைத்து துரித உணவகங்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவங்கள் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் சமையல் செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்ய உணவக உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்படு கிறது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
- தேன்கனிக்கோட்டையில் 500 போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது.
- 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் 50 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்ப தற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ராம ஆஞ்சினேயர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வ லம் மேளதாளத்துடன் நகரின் முக்கிய சாலை களான ராஜாஜி சாலை, பஸ் நிலையம், காந்தி சாலை, நேதாஜி சாலை, நேரு சாலை, கோட்டைவாசல் தர்கா வழியாக பட்டா ளம்மன் கோவில் ஏரியை சென்ற டைந்தது. பின்னர் கிரேன் மூலம் அனைத்து விநாயகர் சிலைகளையும் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது . முன்னதாக, ஊர்வலத்தையொட்டி இந்து முன்னனி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் பொது கூட்டம் நடை பெற்றது.
இதில் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். இதில் இந்து முன்னனி கோட்ட அமைப்பாளர் உமேஷ் மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்திக் அரிஷ் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் .
ஊர்வலத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தேன் கனிகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, காவல் ஆய்வாளர்கள் நாகராஜ் , சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 500 போலி சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள், நீர் தேங்கும் இடங்களில் குளோரிநேசன் செய்யவும், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்தவும் கொசு உற்பத்தியாவை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிக்கும் பாத்திரங்களை அவ்வப்போது தூய்மை செய்து, மூடி வைத்து உபயோகப்படுத்தவும் மற்றும் சுற்றுப்பு றத்தில் மழைநீர், கழிவுநீர் போன்றவை தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் மற்றும் மழைக்காலங்களில் வீட்டின் அருகாமையில் தேங்கியுள்ள நீர்நிலைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும், மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகிசிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். தினந்தோறும் குடிநீர் நிலைகளில் குளோரி நேசன் செய்யப்பட வேண்டும். உடைந்த குடிநீர் பைப்புகளை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். பழைய டயர்களை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்து, அவர்களுடைய வீட்டில் உள்ள கொசுப்புழுவை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மொட்டை மாடியிலுள்ள மேல்தளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகாமல் இருக்க வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் குளோரிநேசன் செய்ய வேண்டும. தனியார் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்துக் கடை உரிமையா ளர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசி வம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
- ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓசூர்:
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், இன்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் பிரவீண் ஷெட்டி உத்தரவின் பேரில், அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடம், மற்றும் பானைகளை உடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியது. இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் இரு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயண கவுடா உத்தரவின் பேரில், அந்த அமைப்பின் ஆனேக்கல் தாலுகா தலைவர் கஜேந்திரா தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், திடீரென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அத்திப்பள்ளி போலீசார், எரிந்த நிலையில் இருந்த உருவப்பொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இந்த மறியல் போராட்டத்தில், 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர்.
கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி:
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
- கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பி னருமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெங்களூரு சாலை யில் மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் அமைக்க ப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டடத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வழி நெடுகிலும் தி.மு.க. கொடி ஏந்தி தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்படு கிறார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி யில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ள கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தேவராஜ் மஹால் வளாகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர், துணை தலைவர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ 2 பூத் கமிட்டி, கிளை கழக செயலாளர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த அனைத்து நிகழ்ச்சி களிலும் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமாறும், கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






