என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகள் நடும் பணி: மதியழகன் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்
    X

      தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மரக்கன்றுகள் நடும் பணியை பர்கூர் எம்.எல்.ஏ., , மதியழகன் தொடங்கி வைத்த காட்சி.  

    மரக்கன்றுகள் நடும் பணி: மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • ஒசூர் வனக்கோட்டத்தில் 4.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மதியழகன் எம். எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • 100 பேருக்கு டார்ச் லைட் வழங்கப்பட்டது

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் தரம் குன்றிய காடுகளை மேம்ப டுத்த நபார்டு திட்டத்தின் மூலம், 4 லட்சத்து, 20 ஆயிரம் மரக்கன்றுகளை காப்புக்காடு களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி வனச்சர கம், தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மதியழகன் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி வனச்சரகம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பர்கூர் சுற்று வட்டாரங்களில், யானைகள் நடமாட்டம் உள்ள காப்புக்கா டுகளை ஒட்டியுள்ள விவசாயி களுக்கு இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறை மூலம் வழங்கப்பட்ட, டார்ச் லைட்டுகளை, 100 பேருக்கு வழங்கினார்.

    ஒசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனவர்கள் சம்பத்குமார், வெங்கடாசலம், பிரவின்ராஜ், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்த லைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    அதேபோல யானைகள் நடமாட்டம் குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்ப தின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், உதவி வனப்பாதுகாவலர் (ஓய்வு) சிவாஜி, வனச்சரக அலுவலர் பாபு (ஓய்வு) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்கள்.

    Next Story
    ×