என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெலமங்கலம் பகுதியில் சமத்துவ விநாயகர் சிலைகள்  விசர்ஜன ஊர்வலம்
    X

    விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு சென்ற காட்சி.

    கெலமங்கலம் பகுதியில் சமத்துவ விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

    • கெலமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமத்துவ விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
    • இஸ்லாமியார்கள், கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் போலீஸ் காலனி அருகில் கெலமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் மும்தாஜ் அசேன் சார்பில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சமத்துவ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப் பட்டது.

    இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த சமத்துவ விநாயகர் சிலையை நேற்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முஸ்லிம்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர்.

    பின்னர் கிரேன் மூலம் டிராக்டரில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சின்னட்டியில் உள்ள சனத்குமார் நதியில் பூஜைகள் செய்து விசர்ஜனம் செய்யபட்டு மேலும் அன்ன தானம் வழங்கபட்டது. இதில் தி.மு.க நகர கிளை செயலாளர் நஜிர் பாஷா ,அக்ரம், ராஜு, ரமேஷ், ஆனந்த், முனிராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஜீவா, நகர் கணேஷ்காலனி, வாணியர் தெரு, நேதாஜி நகர், ஜிபி ஆகிய பகுதிகளிலும் வைத்திருந்த 6 விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து டிராக்டரில் அமர்த்தி மேளதாளங்கள் முழங்க ,தாரை, தப்பட்டை ஒலிக்க, ஆடல் பாடலும் பக்தர்கள் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று சனத்குமார் நதியில் விசர்ஜனம் செய்தனர் .பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கபட்டது.

    கெலமங்கலம் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் வருவாய் ஆய்வாளர் மாரப்பா, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சு நாத், மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.

    Next Story
    ×