என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
- தடுப்பணைக்கு குளிக்க சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்னமல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(வயது15). 6ம் வகுப்பு வரை படித்த இவர், பெற்றோரை இழந்த நிலையில் தன் தாத்தா முருகன் என்பவரது வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று மாலை சத்யா மற்றும் அவரது தோழிகள் இருவருடன் சின்ன மல்லப்ப ாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் வனப்பகுதியை ஒட்டி யுள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்துள்ளது. அதில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிறுமி சத்யா தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது தோழில்கள் கூச்சலிட்டவாறு அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து தேடினர்.
பின்னர், இது குறித்து பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த கிடந்த சத்யாவை சடலமாக மீட்டனர்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






