என் மலர்
நீங்கள் தேடியது "வரவேற்க திரண்டு வாருங்கள்"
- முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
- கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பி னருமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெங்களூரு சாலை யில் மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் அமைக்க ப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டடத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வழி நெடுகிலும் தி.மு.க. கொடி ஏந்தி தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்படு கிறார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி யில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ள கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தேவராஜ் மஹால் வளாகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர், துணை தலைவர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ 2 பூத் கமிட்டி, கிளை கழக செயலாளர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த அனைத்து நிகழ்ச்சி களிலும் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமாறும், கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






