என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
- 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஓசூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஓசூரிலும் ஆண்டு தோறும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், சிவசேனா கட்சியின் இளைஞர் அணி சார்பிலும், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா ஆகிய இந்து அமைப்புகள் சார்பிலும், பல்வேறு குழுக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஓசூர் பகுதியில், 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.
பாலபூர் விநாயகர், சனாதன விநாயகர், மகாராஜா விநாயகர், வல்லப விநாயகர், என பல்வேறு நூதன பெயர்களில், பிரம்மாண்ட செட்கள் அமைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை, கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் ஏராளமானோர், நீண்ட வரிசையில் சென்று தரிசித்து வியந்தனர்.
கடந்த சனிக்கிழமை வரை, பெரும்பாலான சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நிறைவு நாளான நேற்று, மீதமுள்ள 150 சிலைகளில், 85 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரியிலும், மற்ற சிலைகள், கெலவ ரப்பள்ளி அணை, சாந்தபுரம் ஏரி, தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் டாகூர் மற்றும் சேலம், நாமக்கல் தர்மபுரி ஆகிய 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1,400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஓசூர் நகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், பாகலூர் ரோடு, ராம்நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, தாலுக்கா அலுவலக சாலை, எரித்தெருவழியாக தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு ராம நாயக்கன் ஏரியில் கரைக்கப்பட்டன. ஊர்வ லத்தின்போது, சிலைகள் முன்பு இளைஞர்களும், பெண்களும் உற்சாகமாக நடனமா டியவாறு சென்றனர்.
மேலும், கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது, பொதுமக்கள் ஆர்வத்துடன் ஊர்வலம் சென்ற வழி நெடுகி லும் குவிந்து, விநாயகர் சிலைகளை தரிசித்து மகிழ்ந்தனர்.மேலும், சிலைகள் முன்பு ஆர்வத்துடன் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வ லத்தை யொட்டி, ஓசூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- கிருஷ்ணகிரிக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரண்டு வர வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அணி துணைத்தலைவர் எஸ். தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.
- திமுக இளைஞரணி செயலளாரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி வருகிறார்.
கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணைத்த தலைவர் போச்சம்பள்ளி எஸ். தென்னரசு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவருக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம். எல். ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. தமிழ கத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக் கும் மாணவர்க ளுக்கு பல்வேறு உதவி களை செய்து இளை ஞர் களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். கிருஷ்ணகிரியில் நடக்கும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவருக்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் . வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் கழக மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.
அதிலும் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைய கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- கிருஷ்ணகிரியில் அரசு விழா ஏற்பாடுகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
- ரூ. லட்சம் 81 செலவில் அமைக்கப்பட்ட குளிர்பதன கிடங்கு திறப்பு நடக்கிறது
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்துக்கொள்ள வருகை தருகிறார்.
அதனையொட்டி நேற்று விழா முன்னேற்பாடு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் சட்டமன்ற உறுப்பி னர் பிரகாஷ், (பர்கூர்) மதியழகன் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கர பாணி தெரிவித்ததாவது:-
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சி யில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளா கத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
தொடர்ந்து வேப்பனப் பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி குமரன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மற்றும் கையேடு களை வழங்க உள்ளார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதனை தொடர்ந்து மாவட்ட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்துக் காட்டுவோம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதல்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாய்வின் போது மாவட்ட கலெக்டர், நேர்முக உதவியாளர் , கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட் சியர், தனி வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அலைகடலென திரண்டு வர வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் தெரிவித்தார்.
- 20 அணிகள் சார்பில் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு இன்று வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அலைகடலென திரண்டு வாருங்கள் என்று கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் வெளியிட்டு உள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், இளை ஞர்களின் விடிவெள்ளி யுமான சின்னவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட் கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
காலையில் சென்னப் பள்ளியில் அக்ரோ புராசசிங் சென்டர்ரில் ரூ.26 கோடியே 81 லட்சத்தில் நடந்து வரும் காய்கறி முதன்மை படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், சூளகிரி அருகே மருதாண் டப்பள்ளியில் சிப்காட் மொபைலிட்டி பார்க் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்கிறார்.
பின்னர் குந்தாரப்பள்ளி குமரன் மகாலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டுகள், கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகாலில் கழக மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்குகிறார். பின்னர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார்.
அமைச்சராக பொறுப் பேற்ற பிறகு முதல் முறை யாக கிருஷ்ணகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரின் நம்பிக்கை நட்சத்திரமாய், எங்களின் வழிகாட்டியாய் விளங்கும் சின்னவர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் அலைகட லென திரண்டு வாருங்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிர மாண்ட வர வேற்பு அளிக்க ப்படுகிறது. வழிநெடுகிலும் தாரை, தப்பட்டை முழங்க பிரமாண்ட ஊர்வலமாக சின்னவர் அழைத்து செல்லப்படுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் இன்று சின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கிழக்கு மாவட்ட தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சி லர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ 2 பூத் கமிட்டி, கிளை கழக செயலாளர், தி.மு.க. தொண்டர் கள், பொது மக்கள் கலந்து கொண்டு, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒசூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் போலீசார் கைது செய்தனர்.
- முன் விரோதம் காரணமாக மோதல்
ஓசூர் சென்ன சந்திரத்தைச் சேரந்தவர் முருகேசன் (வயது 27). கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி முருகேசன் தரப்பினரும், நாகேஷ் தரப்பினரும் விநாயகர் சிலையை கரைத்து விட்டு வந்த போது ஏற்பட்ட பிரச்சினையில், முருகேசன், பிரகாஷ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதில் காயம் அடைந்த முருகேசன் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஓசூர் சென்னசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்த சூர்யா (25), கிரண்குமார்(27) , காளியப்பன் (29), நாராயணன் (48) ஆகிய 4 பேரை கைது செயதனர். மேலும் நாகேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல சூர்யா கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் போலீசார் சிவா (31), சிவராஜ் (28), கஜேந்திரன் (31), தேவராஜ் (30), சிவா (32), ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- தேன்கனிக்கோட்டையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பேசியவர் மீது வழக்கு பதிவு
- விநாயகர் ஊர்வலத்தின் போது பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோ ட்டையில் கடந்த 21 ந்தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் கோட்டம் தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளை யாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை அவதூ றாகவும் தகாத வார்த்தை களாலும் பேசினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறி யுள்ளார்.
அதன் பேரில் சந்தோஷ் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
- இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீடீரென அங்கு உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.

மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்டன் முருகன் என்பவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த18-ந் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கி ழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதன்படி, நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவா ய்ப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோயிலுக்கு கிருஷ்ண கிரி, தருமபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் வந்தி ருந்தனர். சுவாமி சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டது.
இதே போல், வேலம்பட்டி அருகே பெரியமலை கோயில், 50 அடி உயர மலை உச்சியில் உள்ள ஐகொந்த ம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மேல் உள்ள சீனிவாச பெருமா ளை வழிபட்டனர். மூலவர் சீனிவாச பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சனிக்கிழ மையினை யொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மார்கெட் சாலை யோரம் பூக்கள் மற்றும் பூ மாலைகள் அதிக அளவில் விற்பனையானது. ஒரு முழம் சாமந்தி பூ ரூ. 30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் செண்டுமல்லி, மல்லி பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
அதே போல கனவா ய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்களின் நேர்த்தி க்கடனை செலுத்தி னார்கள். நேற்று முதல் புரட்டாசி சனி என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலும் காலையிலேயே பொதுமக்கள் குளித்து, பெருமாளை வழிபட்டனர்.
- கெலமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமத்துவ விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
- இஸ்லாமியார்கள், கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் போலீஸ் காலனி அருகில் கெலமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் மும்தாஜ் அசேன் சார்பில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சமத்துவ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப் பட்டது.
இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த சமத்துவ விநாயகர் சிலையை நேற்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முஸ்லிம்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர்.
பின்னர் கிரேன் மூலம் டிராக்டரில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சின்னட்டியில் உள்ள சனத்குமார் நதியில் பூஜைகள் செய்து விசர்ஜனம் செய்யபட்டு மேலும் அன்ன தானம் வழங்கபட்டது. இதில் தி.மு.க நகர கிளை செயலாளர் நஜிர் பாஷா ,அக்ரம், ராஜு, ரமேஷ், ஆனந்த், முனிராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜீவா, நகர் கணேஷ்காலனி, வாணியர் தெரு, நேதாஜி நகர், ஜிபி ஆகிய பகுதிகளிலும் வைத்திருந்த 6 விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து டிராக்டரில் அமர்த்தி மேளதாளங்கள் முழங்க ,தாரை, தப்பட்டை ஒலிக்க, ஆடல் பாடலும் பக்தர்கள் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று சனத்குமார் நதியில் விசர்ஜனம் செய்தனர் .பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கபட்டது.
கெலமங்கலம் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் வருவாய் ஆய்வாளர் மாரப்பா, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சு நாத், மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.
- ஒசூர் வனக்கோட்டத்தில் 4.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மதியழகன் எம். எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- 100 பேருக்கு டார்ச் லைட் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் தரம் குன்றிய காடுகளை மேம்ப டுத்த நபார்டு திட்டத்தின் மூலம், 4 லட்சத்து, 20 ஆயிரம் மரக்கன்றுகளை காப்புக்காடு களில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி வனச்சர கம், தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மதியழகன் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி வனச்சரகம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பர்கூர் சுற்று வட்டாரங்களில், யானைகள் நடமாட்டம் உள்ள காப்புக்கா டுகளை ஒட்டியுள்ள விவசாயி களுக்கு இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறை மூலம் வழங்கப்பட்ட, டார்ச் லைட்டுகளை, 100 பேருக்கு வழங்கினார்.
ஒசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனவர்கள் சம்பத்குமார், வெங்கடாசலம், பிரவின்ராஜ், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்த லைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
அதேபோல யானைகள் நடமாட்டம் குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்ப தின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், உதவி வனப்பாதுகாவலர் (ஓய்வு) சிவாஜி, வனச்சரக அலுவலர் பாபு (ஓய்வு) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்கள்.
- தடுப்பணைக்கு குளிக்க சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்னமல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(வயது15). 6ம் வகுப்பு வரை படித்த இவர், பெற்றோரை இழந்த நிலையில் தன் தாத்தா முருகன் என்பவரது வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று மாலை சத்யா மற்றும் அவரது தோழிகள் இருவருடன் சின்ன மல்லப்ப ாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் வனப்பகுதியை ஒட்டி யுள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்துள்ளது. அதில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிறுமி சத்யா தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது தோழில்கள் கூச்சலிட்டவாறு அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து தேடினர்.
பின்னர், இது குறித்து பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த கிடந்த சத்யாவை சடலமாக மீட்டனர்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஒசூரில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்- தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில்:-
வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ண கிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளை யாட்டு துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலி னுக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இதில். கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகி கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வரவேற்பு ஏற்பாடு கள் குறித்தும் விரிவாக பேசினார்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட, மாநகர, நிர்வாகி கள் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.






