என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒசூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
- அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி கூட்ட ரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க.,, அதிமுக உறுப்பினர்கள், தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி, ரோடு வசதி, கழிவுநீர் கால்வாய் ஆகியன குறித்து வலியுறுத்தினர். மேலும், குறைகள் மற்றும வார்டு பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்களை தொடர்பு கொண்டால் எங்களை மதிப்பதே இல்லை, பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் குற்றம் சாட்டினர். மன்ற உறுப்பி னர்களின் கேள்வி களுக்கு மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் சினேகா ஆகியோர் பதிலளித்து பேசினர்.
இந்த கூட்டத்தில், மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
- 4989 மதுப்பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
- கடத்தல்காரர்களிடமிருத்து பறிமுதல் செய்யப்பது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் வனப்ப குதியில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 3 மாதங்களில் கடத்தி வரப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4989 மது பாட்டில்கள் முழுவதையும் நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் அருகே சானமாவு வனப் பகுதியில் நேற்று மாலை, மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் முன்னி லையில், மதுவிலக்கு போலீசார் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
- சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜக.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.
அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறுத்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உண்மை தெரியவரும். அது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
சிலர் தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு பேசுகிறார்கள். அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம்.
அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. அது 2024 பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கூட்டணி கிடையாது அ.தி.மு.க. சார்பில் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் மாவீரன் என்றார்கள்.
காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய பொறியாளர் சங்க தலைவராக ஒசூர் அதியமான் தேர்வு செய்யப்பட்டார்.
- நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக ஓசூர் அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற தேர்தலில், ரங்கநாத், அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அதியமான் பொறியியற் கல்லூரி பேராசிரியர்களான என்.எஸ்.பத்ரிநாராயணன் (தன்னாட்சி செயல்பாடு), டீன் எஸ்.வெங்கடேசன் வானவியல் துறைதலைவர் ஜெ. அறிவுடைநம்பி, உயிரி தொழில்நுட்ப துறைதலைவர் மணிவாசகன், உயிரியல் மருத்துவ துறை தலைவி உதயசூரியா, கணித துறை தலைவி பிரமீளா கலாதரன், ஆங்கில துறை தலைவர் உத்தம் குமார், வேதியியல் துறைதலைவர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப துறை தலைவி திலகவதி, மின்னணு தகவல் துறை துணை தலைவி, மேனகா தேவி மற்றும் இந்திய பொறியாளர் சங்க மாணவ பிரிவினர் கல்லூர முதல்வர் ரங்கநாத்தை பாராட்டி, வாழ்த்தினர். மேலும், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் பலியானார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே யுள்ள பாகலூர் செவகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேரன் (வயது22). இவர் தனியார் பேட்டரி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்க ளாக இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இவரை இவரது பெற்றொர்கள் குடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சேரன் சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்கு அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் ராயக்கோட்டை கோணம் பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பகுதியில் அரை ஏக்கர் புறப்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். அது குறித்த புகாரின் பேரில் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகா ரிகள் அளந்து வேலி போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த விவசாயி சம்பவத்தன்று விஷம் குடித்தார்.
அவரை மீட்டு உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
- மின்மாற்றி மீது ஏறி மின்மாற்றி காப்பர் கம்பிகள் திருடி சென்றுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி போலீஸ் நிலைய சரகம் ஆனந்தூர் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இதையறிந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி மீது ஏறி மின்மாற்றி காப்பர் கம்பிகள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகள் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுக்கும்- மக்களுக்கும் பாலமாக அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து பேசியதாவது:-
தரமான சிகிச்சை
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவ மனைகளில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதியதாக தொடங்கி அவற்றிற்கு வங்கி கடன் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் விளையக் கூடிய காய்கறிகள், மா, பூ உற்பத்திகளை அதிகரிக்கவும், அவற்றை பாதுகாப்பதற்கு குளிர்பதன கிடங்குகளில் உரிய நேரத்தில் விவசாயிகள் விற்று லாபம் பெறுவதற்கும், தமிழக அரசு அறிவித்த முத்திரை பதித்த திட்டங்களை தொய்வுயின்றி செயல்படுத்த அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
அரசுத்துறை அலு வலர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அனைத்து நலத்திட்டங்களும் மக்க ளுக்கு சென்றுசேர முழு ஓத்துழைப்பு தர வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் துறை சார்பில் 50 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 44 மதிப்பில் வேளாண்மை இடு பொருட்களையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான வேளாண்மை எந்திரங்கள், கருவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 3,293 பயனாளிகளுக்கு ரூ.41 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 516 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத் துறை சார்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.தொடர்ந்து, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.40 லட்சத்திற்கான காசோலையை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலெக்டரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் சக்கரபாணி, சிறப்பு திட்ட அமலாக்க துறை செயலாளர் தரேஸ் அகமது, கலெக்டர் சரயு, செல்லகுமார் எம்.பி., மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி முதன்மை பதப்படுத்தும் கிடங்கு மற்றும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுமான பணிகளை தரமா கவும், விரைவா கவும் முடிக்கப்பட்டு விவசா யிகளின் பயன்பாட்–டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மருதாண்டப் பள்ளி ஊராட்சியில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக வருங்கால நகர் திறன் பூங்கா அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட உள்ள தாகவும், இதனால் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரூர் தடுப்பணை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீர் வீணாகிறது.
- 66 ஏரிகளை நிரப்ப கோரிக்கை
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே. ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னா கவுண்டம்பட்டி, கடத்துார் மற்றும் சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய ரூ. 10 லட்சம் தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. தொடர்ந்து இத்திட்டத்துக்கு கடந்த, 2020 பட்ஜெட்டில் ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலையில் தருமபுரி மாவட்ட மக்கள் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து திறக்கப் பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பியது. அன்று முதல் இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தற்போது ஆற்றில் செல்லும் தண்ணீர் மூலம் வறண்டு கிடக்கும், 66 ஏரிகளை நிரப்பி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊத்தங்கரையில் இரு தரப்பினர் இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவத்தில் 8 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- முன் விரோதம் காரணமாக மோதல்
ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.
அது குறித்து கஸ்தூரி ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆறுமுகம், ராமு (28), அருள் (26), வெங்கடாசலம் (24) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல ஆறுமுகம் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் கண்ணன் (60), ராணி (55), கோவிந்தன் (53), வெங்கடாசலம் (50) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மத்திகிரி அருகே தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை மேற்கொ்ண்டு வருகின்றனர்.
மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியை சேர்ந்தவர் வினய்குமார் (வயது 38). தையல் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது. இதனால் கோபித்துக் கொண்டு கடந்த 19-ந் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த வினய்குமார் கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குருபரப்பள்ளி அருகே மோட்டர் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குருபரப்பள்ளி அருகே உள்ள பெரிய புலியரசியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவர் அதே பகதியை சேர்ந்த சக்திவேல் (17) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி அருகில் கடந்த 24-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் மோட்டார்சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சக்திவேல் படுகா யத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன.
- தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஓசூர்:
காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் இன்று கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ் சங்கம் உள்பட 150க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
இதையொட்டி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன. அதே போல், இரவு 12 மணிக்குள் அனைத்து தமிழக பஸ்களும் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி திரும்பிவிட்டன.
பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி, 400-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் பெங்களூரு சென்று வருகின்றன.
மேலும் சில தனியார் பஸ்களும் பெங்களூரு சென்றன. தமிழக அரசு பஸ்கள், பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லைவரை மட்டும் சென்று வந்தன. தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






