என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி  மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது: அமைச்சர் சக்கரபாணி தகவல்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது: அமைச்சர் சக்கரபாணி தகவல்

    • கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
    • தொழிற் நிறுவன பிரநிதிகளுடன் ஆலோசனை

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக பொறுப்பு நிதி தொடர்பான வலைதள சேவையை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

    மேலும் பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு நிதி தொடர்பாக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த வலைதள பக்கத்தில் மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற இனங்களின் எந்தெந்த பகுதிகளில் தேவை உள்ளது என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் பெருந்தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களை இந்த வலைதள பக்கத்திலிருந்து தேர்வு செய்து மேற்கொள்ள வேண்டும்.

    இப்பணிகள் பொதுமக்களுக்கு பெரு மளவு பயனளிப்பதாகவும், அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும், பெருநிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வழங்கி, கூடுதலாக அதிக பணிகளை மேற்கொள்ளலாம். தொழில்துறை வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. எனவே, இங்கு இயங்கி வரும் நிறுவனங்கள் தாங்கள் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான வசதிகளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் செய்து கொடுத்து, அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியயாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி கலெக்டர் பாபு, தொழிலக பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் சபீனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்கமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், கனிம வளத்துறை துணை இயக்குநர் வேடியப்பன், தாசில்தார்கள் ஜெய்சங்கர், விஜயகுமார், பெருநிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×