என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் உள்ள சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீரை படத்தில் காணலாம்.
ஆக்கிரமிப்பால் மழை நீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது
- கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஊத்தங்கரை, மத்தூர், கல்லாவி ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை காரணமாக ஊத்தங்கரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி அலுவலகம் எதிரே தனி நபர் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேறும் பாதை இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. அந்த தண்ணீர் வடிந்து செல்வதற்கான வழியில்லாமல் அதில் கொசுக்கள் புழு உற்பத்திய செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த தண்ணீர் தேங்கத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் சாலையை கடப்பது மிக சவாலாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கிய பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லாமல் எதிர் திசையில் செல்லக்கூடிய ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் பாதையை அடைத்துள்ள பகுதியை உடனடியாக சரி செய்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






