பர்கூர் அருகே விபத்து: லாரிகள் மோதி டிரைவர்-கிளீனர் பலி

லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பர்கூர் அருகே விபத்து: லாரிகள் மோதி டிரைவர்-கிளீனர் பலி
Published on

பர்கூர்:

சென்னையில் இருந்து நெகிழிப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டு இருந்தபோது, அப்போது இந்த லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் டிரைவர், வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சரவணன் (வயது28), அதே பகுதியை சேர்ந்த கிளீனர் விசுவநாதன்(48) ஆகிய 2 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விபத்தில் பலியான சரவணன், விசுவநாதன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com