என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வு பேரணி
    X

    விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வு பேரணி

    • சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.
    • பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாசில்லா பசுமை வழி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் தலைமை ஏற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தியின் போது அரசின் நெறிமு றைகளை கடைபிடிக்க வேண்டும். களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.

    பிளாஸ்டிக் பையை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும். உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் மகேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் மகேந்திரன், ஓசூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    Next Story
    ×