என் மலர்
கிருஷ்ணகிரி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது கொரோனா கால தடை உத்தரவை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரே நேரத்தில் பலர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது கொரோனா கால தடை உத்தரவை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரே நேரத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், ஓசூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓசூர் போலீசார், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 தே.மு.தி.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே மொபட்-மீது லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மொபட்டில் ராயக்கோட்டைக்கு வந்து மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். குட்டூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
தளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அடுத்த ஜனபெண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கிருஷ்ணப்பா தனது விவசாய நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் லூயிஸ் (வயது 79). முன்னாள் ராணுவ வீரர். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி பக்கமுள்ள தனியார் ஓட்டல் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜான் லூயிஸ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் அவதானப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாது (வயது42), நாகராஜ் (35), சுரேஷ் (26), முருகேஷ் (46), மாயன் (50), சண்முகம் (38) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள கே.பேயனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சிங்காரப்பேட்டை அருகே பல்லன்கொட்டாய் கிராமத்தில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் நாராயணன் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கொட்டுகாரம்பட்டி-கேத்துநாயக்கன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 28 பேர் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 28 பேர் பாதிக்கப்பட்டனர். 29 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 41 ஆயிரத்து 187 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 256 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 327 ஆக உள்ளது.
தேன்கனிக்கோட்டையில் மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி கவுரி (வயது 45). இவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் அஞ்செட்டியை அடுத்த பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக காந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
ஊத்தங்கரை அருகே உள்ள மல்லிப்பட்டி சாமியார் நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் என்கிற விஜய். இவருடைய மனைவி அலமேலு (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அலமேலு அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் அலமேலு தற்கொலை குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
கந்திகுப்பம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 27). சிவில் என்ஜினீயர். இவர் ஓசூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். 31 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 ஆயிரத்து 158 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 327 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.






