என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பெண்ணை பாம்பு கடித்தது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்தம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மனைவி புஷ்பலதா (46).

    நேற்று இரவு, வீட்டருகே இவரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • காரில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகன் ரகுநாதன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 323 கிலோ அளவிலான, 2 லட்சத்து, 84 ஆயிரத்து, 600 ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தியது தெரிந்தது.

    விசாரணையில் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 38), திருவள்ளூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (33) ஆகியோர் பெங்களூருவில் குட்கா பொருட்களை வாங்கி சென்னையில் விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    • பத்திரகாளியம்மன் கோவில் விழா நடந்தது.
    • இதில் 500க்கும் ஆடுகள், பன்றிகள் பலியிடப்பட்டன.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் கிராமம் இங்கு 112 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டு இன்று பரணை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை முக்கிய நிகழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது.

    கோவில், வளாகத்தில் மூங்கிலால் 5 பரண்கள் அமைத்து ஒரு பரணில் பன்றியையும் நான்கு பரணையில் ஆடுகளையும் படுக்க வைத்து கட்டி வைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டனர்.

    காலை பூசாரிக்கு அருள் வந்து, பரணை மீது ஏறி பன்றியின் மார்பு வயிற்று பகுதி கிழித்து, அதில் துண்டு துண்டாக வெட்டிய வாழை பழத்தை வயிற்றில் போட்டு ரத்தத்துடன் கலந்து சிறப்பு பூஜை செய்த பின், அதை பூசாரி அங்கு கூடியிருந்த கூட்டத்தில் வீசினார்.

    அதை ஆண்களும் பெண்கள் மடியேந்தி பிடித்து சாப்பிட்டனர். பச்சை ரத்தம் கலந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது

    முன்தாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டியதை நிறைவேறியது பொருட்டு கோவில் முன் பக்தர்கள் ஆடுகள்,மற்றும் பன்றிகளை பலியிட்டனர்.

    இதில், 1000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர். வெட்டிய ஆடு, கோழி, பன்றிகளை வந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டதால் இந்த ஆண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

    இதில் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, புலியூர், அரசப்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, உள்ளிட்ட இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் நாகரசம்பட்டி, மற்றும் பாரூர் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு.

    கிருஷ்ணகிரி 

    பெங்களூர் பொம்மசந்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் ஓசூர் வரை நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கூறினார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெங்களூர் பொம்மசந்திரம் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    குறிப்பாக ஓசூர், தளி, சூளகிரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலை, தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி பெங்களூருக்கு சென்று வரும் சூழ்நிலை உள்ள காரணத்தினால், இக்கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து பல முறை பாராளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.

    மேலும் கர்நாடகா அரசிடம் வலியுறுத்திய போது இத்திட்டத்தை நீட்டிக்க முடியாது என்று முதலில் மறுத்துவிட்டனர். அதன் பிறகு பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் தலைமை அதிகாரி அஜீஸ்சேட்டுடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினேன்.

    அதே போல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அதிகாரி பன்சல்லை நேரில் சந்தித்து இத்திட்டம் குறித்து பேசினேன்.கடந்த 2021 ஜனவரி 22-ந் தேதி அனைத்து மெட்ரோ ரயில் திட்ட தலைமை அதிகாரிகளின் கூட்டம் பூனேயில் நடந்தது.

    அக்கூட்டத்திலும் இத்திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இது பற்றி பரிசீலிப்பதாக கர்நாடகா அரசு அதிகாரிகள் கூறினர்.

    கடந்த மார்ச் 21-ல் கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் பொம்மை, கர்நாடகா மாநில எதிர்கட்சித் தலைவர் சீத்தராமையாவுடன் சென்று, இத்திட்டம் நிறைவேற்றினால், இரண்டு மாநிலங்களும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் அடையலாம் என்று விளக்கமாக எடுத்து கூறினேன்.

    பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த மே மாதம் 23-ந் தேதி கர்நாடகா மாநில அரசு சார்பில், இந்த திட்டத்தை பெங்களூர் முதல் ஓசூர் வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    எனவே விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இத்திட்டம் குறித்து எடுத்துரைக்க உள்ளேன். நீ

    ண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த கனவு திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்ட கர்நாடகா முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கும், ஒப்புதல்தர உள்ள தமிழக முதல்வருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது, முன்னாள் மாவட்டத் தலைவர்கள்கி ருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில்ஜேசு, சிறுபான்மை பிரிவு ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர் சேகர், வழக்கறிஞர் அசோகன், முன்னாள் நகர தலைவர் முபாரக், சேவாதளம் நாகராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கந்திகுப்பம் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள கனகமுட்லு தண்ணீர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது40). இவர் ஆடுகள் மேய்க்கு தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று இவர் வழக்கம் போல் ஆடு மேய்க்கும் தொழிலாளி துரை என்பவருடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.

    மதியம் இருவரும் ஜிடிமலை பெரியகல்குந்து பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தனிதனியாக ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இருளர் காலனியை சேர்ந்த திம்மராஜ் (35) என்பவர் லட்சுமியுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து தலையில் வெட்டியுள்ளார்.

    இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு துரை மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் திம்மராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து துரை கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கொலை செய்து விட்டு தலைமறைவான திம்மராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • விஷம் குடித்த தொழிலாளி பலியானார்.
    • மது என நினைத்து குடித்ததால் உயிரை பரித்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் மது என்று நினைத்து தவறுதலாக விஷத்தை குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் மோதி வடமாநில டிரைவர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர்.
    • சாலையை கடக்க முயன்ற போது விபத்து நேர்ந்த பரிதாபம்.

    கிருஷ்ணகிரி,

    மத்திய பிரதேச மாநிலம், இண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் யாதவ் (60). இவர்கள் இருவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியை ஓட்டி வந்தனர்.

    கடந்த 5-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிலையம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சாலையின் மறுபுறம் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

    அப்போது அவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி வந்த கார் சிவபிரசாத், ஜெகதீஸ் யாதவ் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவபிரசாத் இறந்தார். ஜெகதீஸ் யாதவ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இந்த விபத்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை போன வழக்கு.
    • வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டது.

    ஓசூர்,

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாவிலிருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டைனர் லாரியில் கொண்டுசெல்லப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேரனஹள்ளி நெடுஞ்சாலையில் அந்த லாரியை கடந்த 2020-ம் ஆண்டு மர்ம கும்பல் கடத்தியது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.4லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் சவுகான்,சஞ்சய், நிகல்சிங், புராசவுகன் உள்ளிட்ட மேலும் 4 பேரை சூளகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்வீரபத்திரன். இவரது மகன் தீபக்குமார் (வயது 11).

    இவன் கடந்த மாதம் 26-ந்தே தி மதியம் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதையடுத்து அவனை பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    இதையடுத்து சிறுவன்தீ பக்குமாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில்உ ணவுக்குழாயின் தொடக்கத்தில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவசரமாக அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுஜய்குமார், சபரீஷ், வினோத்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் நந்தபிரபு, சுபா, பிரவீன்குமார் தலைமையில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது உள்நோக்கி கருவி மூலம் நாணயம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் கூறியதாவது:-

    இது போன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில், வெளி இடங்களில்செ ய்ய ரூ.50 ஆயிரம் வரையில் செலவு ஏற்படும்.

    தமிழக அரசால் முற்றிலும்இ லவசமாக சிறப்பு வாய்ந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்களால், பேராசிரியர்கள், அணை பேராசிரியர்கள் மூலம் சிறந்த முறையில்இ ந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 65 ரேசன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை மண்டல இணை பதிவாளர் ஏகாம்பரம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் சரக துணை பதிவாளர்கள் செல்வம் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழுவினர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள 65 ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • நண்பர்களுடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது.
    • வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுண்ணாம்பு தெருவை சேர்ந்த ஆஞ்சி என்பவரது மகன் சந்தோஷ் (22). கூலித்தொழிலாளி.இவர் நேற்று இரவு ராயக்கோட்டை ஹட்கோ பகுதியில் 3 பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் சந்தோசை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதில், அவரது தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து ஒசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • கொரட்டகிரி கிராமத்தில் செயல்படும் குவாரிகளை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • ஆனால் இதுவரை குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தில் 6 குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குவாரிகளுக்குச் செல்லும் லாரிகளால் புழுதி ஏற்பட்டு பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதனால் குவாரிகளை மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, குவாரிகளுக்கு லாரிகள் செல்ல வசதியாக மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரிகளை மூட வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கருப்புக்கொடியுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×