என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை பகுதியில்   65 ரேஷன் கடைகளில்   அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    ஊத்தங்கரை பகுதியில் 65 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

    • 65 ரேசன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை மண்டல இணை பதிவாளர் ஏகாம்பரம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் சரக துணை பதிவாளர்கள் செல்வம் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழுவினர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள 65 ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×