search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போச்சம்பள்ளி அருகே பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் சாமி தரிசனம் செய்ய கூடியிருந்த பக்தர்கள். கூட்டம்.

    போச்சம்பள்ளி அருகே பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா

    • பத்திரகாளியம்மன் கோவில் விழா நடந்தது.
    • இதில் 500க்கும் ஆடுகள், பன்றிகள் பலியிடப்பட்டன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் கிராமம் இங்கு 112 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டு இன்று பரணை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை முக்கிய நிகழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது.

    கோவில், வளாகத்தில் மூங்கிலால் 5 பரண்கள் அமைத்து ஒரு பரணில் பன்றியையும் நான்கு பரணையில் ஆடுகளையும் படுக்க வைத்து கட்டி வைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டனர்.

    காலை பூசாரிக்கு அருள் வந்து, பரணை மீது ஏறி பன்றியின் மார்பு வயிற்று பகுதி கிழித்து, அதில் துண்டு துண்டாக வெட்டிய வாழை பழத்தை வயிற்றில் போட்டு ரத்தத்துடன் கலந்து சிறப்பு பூஜை செய்த பின், அதை பூசாரி அங்கு கூடியிருந்த கூட்டத்தில் வீசினார்.

    அதை ஆண்களும் பெண்கள் மடியேந்தி பிடித்து சாப்பிட்டனர். பச்சை ரத்தம் கலந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது

    முன்தாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டியதை நிறைவேறியது பொருட்டு கோவில் முன் பக்தர்கள் ஆடுகள்,மற்றும் பன்றிகளை பலியிட்டனர்.

    இதில், 1000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர். வெட்டிய ஆடு, கோழி, பன்றிகளை வந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டதால் இந்த ஆண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

    இதில் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, புலியூர், அரசப்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, உள்ளிட்ட இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் நாகரசம்பட்டி, மற்றும் பாரூர் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×