என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடி போதையில் தகராறு:  ஓசூர் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
    X

    குடி போதையில் தகராறு: ஓசூர் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

    • நண்பர்களுடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது.
    • வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுண்ணாம்பு தெருவை சேர்ந்த ஆஞ்சி என்பவரது மகன் சந்தோஷ் (22). கூலித்தொழிலாளி.இவர் நேற்று இரவு ராயக்கோட்டை ஹட்கோ பகுதியில் 3 பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் சந்தோசை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதில், அவரது தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து ஒசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×