என் மலர்
நீங்கள் தேடியது "மெட்ரோ ரயில் திட்டம்"
- மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டது.
- பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு.
கிருஷ்ணகிரி
பெங்களூர் பொம்மசந்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் ஓசூர் வரை நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெங்களூர் பொம்மசந்திரம் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
குறிப்பாக ஓசூர், தளி, சூளகிரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலை, தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி பெங்களூருக்கு சென்று வரும் சூழ்நிலை உள்ள காரணத்தினால், இக்கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து பல முறை பாராளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
மேலும் கர்நாடகா அரசிடம் வலியுறுத்திய போது இத்திட்டத்தை நீட்டிக்க முடியாது என்று முதலில் மறுத்துவிட்டனர். அதன் பிறகு பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் தலைமை அதிகாரி அஜீஸ்சேட்டுடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினேன்.
அதே போல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அதிகாரி பன்சல்லை நேரில் சந்தித்து இத்திட்டம் குறித்து பேசினேன்.கடந்த 2021 ஜனவரி 22-ந் தேதி அனைத்து மெட்ரோ ரயில் திட்ட தலைமை அதிகாரிகளின் கூட்டம் பூனேயில் நடந்தது.
அக்கூட்டத்திலும் இத்திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இது பற்றி பரிசீலிப்பதாக கர்நாடகா அரசு அதிகாரிகள் கூறினர்.
கடந்த மார்ச் 21-ல் கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் பொம்மை, கர்நாடகா மாநில எதிர்கட்சித் தலைவர் சீத்தராமையாவுடன் சென்று, இத்திட்டம் நிறைவேற்றினால், இரண்டு மாநிலங்களும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் அடையலாம் என்று விளக்கமாக எடுத்து கூறினேன்.
பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த மே மாதம் 23-ந் தேதி கர்நாடகா மாநில அரசு சார்பில், இந்த திட்டத்தை பெங்களூர் முதல் ஓசூர் வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எனவே விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இத்திட்டம் குறித்து எடுத்துரைக்க உள்ளேன். நீ
ண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த கனவு திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்ட கர்நாடகா முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கும், ஒப்புதல்தர உள்ள தமிழக முதல்வருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, முன்னாள் மாவட்டத் தலைவர்கள்கி ருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில்ஜேசு, சிறுபான்மை பிரிவு ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர் சேகர், வழக்கறிஞர் அசோகன், முன்னாள் நகர தலைவர் முபாரக், சேவாதளம் நாகராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.






