என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தன பள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் அனுமந்தராய சுவாமி, செல்வ காளியம்மன் கோவில்கள் உள்ளது.

    ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    • அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர்மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரியில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று மக்கள் விழித்துக் கொண்டார்கள். இனி வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    தி.மு.க.வின் 14 மாத ஆட்சிக் காலத்தில் இந்த மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளார்கள். எல்லா துறைகளிலும் 20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார்கள். அதுதான் அவர்களின் 14 மாத கால சாதனை. எந்த நன்மையும் இந்த ஆட்சியால் இல்லை.

    கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பேரிடியாக வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தி.மு.க. அரசு கொண்டு வந்தார்கள். மக்களின் மீது பெரும் சுமையை தி.மு.க. அரசு சுமத்தி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர்மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள். இதை செய்வதால் அ.தி.மு.க.வை முடக்கி விட முடியுமா?. எங்களை நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாமல் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் தொழில்களை முடக்க பார்க்கிறார்கள்.

    உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால் நேரடியாக அரசியல் ரீதியாக சந்தியுங்கள். நாங்கள் சந்திக்க தயார். குறுக்கு வழியில் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்காதீர்கள். அது எந்த சக்தியாலும் முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), பாலகிருஷ்ணரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு), மற்றும் ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் சேலம் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் நின்று இருந்தனர்.
    • போலீசார் அவர்களை சோதனை செய்தபோது பையில் 27 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் நின்று இருந்தனர்.

    போலீசார் அவர்களை சோதனை செய்தபோது பையில் 27 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,800 ஆகும்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் அடம்பையில் பெட்டிக்கடை நடத்திவரும் பக்ரூத்தின் (வயது31), புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த முகமது ரபீக் (53) என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    இதே போல் ஓசூர் நேதாஜி ரோடு ஜங்ஷனில் நாராயண சாத்ரா (42) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டவுன் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி ரூ.8,791 மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து நாராயண சாத்ராவை கைது செய்தனர்.

    • மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார்.
    • காலையில் பார்த்தபோது வண்டி மாயமாகியிருந்தது

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை பி.சி.புதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார்.ஓசூரில் உள்ள நிறுவனமொன்றில் வேலை பார்த்துவருகிறார். இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது வண்டி மாயமாகியிருந்தது. இது குறித்து சுகுமார் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிந்து மோட்டார்சைக்கிளை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும்.
    • தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 333 கிராம ஊராட்சிகள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 75-வது சுதந்திர தினப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து பஞ்சாயத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, காணொலிக் காட்சி வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள அனைத்து வட்டா ரத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும்.

    அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிய பிறகு பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். தேசியக்கொடியின் புனிதத் தன்மையைப் பேணும் வகையில் மற்றும் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும்.

    தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது. எனவே, 75-வது சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

    • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், பொதுமக்க ளிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
    • 2 பேர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    மத்திய அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமரின் பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களை பெற்று தருவதாக கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், பொதுமக்க ளிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக 2 பேர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.

    அதில் ஒரு முனையில் பேசும் நபர், மற்றொரு முனையில் பேச கூடிய பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அந்த நபரிடம் பேசும் பெண் மானிய அடிப்படையிலான போர்வெல் திட்டத்தில் பயன் பெற வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரிடம் ரூ.7,500 கொடுத்ததாகவும், அவர் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, பிறகு ஆடிட்டரிடரிடம் கடிதம் பெற்று, ஆவணங்களை பெற்று வாருங்கள் என கூறினார்.

    பணமும் கொடுத்து எதற்காக நான் உங்களிடம் ஆவணங்கள் தர வேண்டும் என்று கூறினேன். என்னை போல பலரும் பணம் கொடுத்துள்ளார்கள். என்னிடம் மற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம், நீங்கள் ரூ.15 ஆயிரம் தாருங்கள் என கேட்டார். நான் ரூ.7,500 தான் கொடுத்தேன். மீதி பணத்தை கொடுக்கவில்லை. அவர் என்னிடம் பிறரையும் அறிமுகப்படுத்தி பணம் வாங்கி தாருங்கள் என கூறினார்.

    எனக்கே வேலையை முடித்து தரவில்லை. பின்னர் எப்படி நான் மற்றவர்களை அறிமுகப்படுத்த முடியும். எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. பிறகு என் மூலம் பணம் கொடுத்தவர்கள் என்னை வந்து தொந்தரவு செய்யவா? இவ்வாறு அந்த பெண் கூறி தனது உரையாடலை முடித்துக் கொள்கிறார். இந்த உரையாடல் ஆடியோ வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செவ்வந்தி (வயது 30). கடந்த சிலவருடங்களுக்கு முன்பு கல்லாவியை சேர்ந்த அன்பரசன் என்பவருடன் செவ்வந்திக்கு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் செவ்வந்தி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் அன்பரசனும் அவரது தம்பி கலையரசனும் செவ்வந்தியின் தாய் வீட்டுக்கு வந்து செவ்வந்தியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த மணிகண்டன் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் மணிகண்டன் தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    • கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாகரெத்தினப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா .இவரது மகள் இந்துமதி (வயது 21).தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. படித்து வருகிறார். இவர் நேற்று வீட்டைவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கிரிஷ்ணகிரி போலிஸில் இந்துமதியின் தந்தை கிருஷ்ணப்பா தந்துள்ள புகாரில் திம்மராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது மகள் இந்துமதி கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ராயக்கோட்டை அருகே யுள்ள ரஹமத் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் தன்யஸ்ரீ (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார். இது குறித்து ராயக்கோட்டை போலீசில் ஆனந்தன் தந்த புகாரில் ராயக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த விவேக் என்ற வாலிபர் தனது மகளை கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கையில் பையுடன் நின்றிருந்த சபியுல் இஸ்லாம் (23) என்பவரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.
    • ரூ. 20,000 மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில் நேற்று மாலை சின்ன எலசகிரி பக்கமுள்ள காமராஜ்நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றுவதாக ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கையில் பையுடன் நின்றிருந்த சபியுல் இஸ்லாம் (23) என்பவரை மடக்கி பிடித்து சோதனையிட்டு, அவரிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர் தற்போது சின்ன எலசகிரி பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும், இவர் விற்பனைக்காக பெங்களூர் அருகே சந்தாபுராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சமீபத்தில் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
    • இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 66).

    இவருக்கு சமீபத்தில் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சீனிவாசனை சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்மை கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாகச் சென்று தங்களது துக்கத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.
    • இதில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்று தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    கிருஷ்ணகிரி, 

    முகமது நபியின் பேரன் இமாம்உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை, எஷீர் என்பவர் கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொலை செய்தார் என கூறப்படுகிறது. அந்த நாளை ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்க நாளாக கடைபிடித்து வரு கின்றனர். அதனால் முகரம் பண்டிகையின்போது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்மை கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாகச் சென்று தங்களது துக்கத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கள் உடம்மை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் உடம்பில் கீறியபடியும், அடித்துக் கொண்டும் ரத்தம் சொட்ட, சொட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    இதில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்று தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த துக்க நிகழ்ச்சி இந்த ஆண்டில் நேற்று நடைபெற்றது. இதில் வழக்கத்தைவிட அதிகமானோர் கலந்து கொண்டனர். இரவில் இஸ்லாமியர்கள் தீமிதித்து துக்க நாளை அனுசரித்தனர்.

    • ஆத்திரமடைந்த சலாமும், பிரித்தும் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் சதீஷை சரமாரியாக தாக்கினர்.
    • பெங்களூருவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் போலீஸ் சரகம் வெள்ளக்குட்டை பகுதியில் சதீஷ் என்பவர் அரசு பஸ்சை ஒட்டி சென்றார். அப்போது பெங்களூருவிலிருந்து வேலூர் நோக்கி மாருதி காரில் சலாம் (வயது 20), பரீத் (62) ஆகியோர் சென்றனர். வழி விடுவது தொடர்பாக சதீசுக்கும் சலாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சலாமும்,பிரித்தும் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் சதீஷை சரமாரியாக தாக்கினர்.

    இதில் காயமடைந்த சதீஷ் சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் தந்த புகாரின்பேரில் காந்திகுப்பம் போலீசார் சலாம் மற்றும் பரீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ×