என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா வைத்து இருந்த 2 பேர் கைது"

    • ஓசூரில் சேலம் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் நின்று இருந்தனர்.
    • போலீசார் அவர்களை சோதனை செய்தபோது பையில் 27 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் நின்று இருந்தனர்.

    போலீசார் அவர்களை சோதனை செய்தபோது பையில் 27 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,800 ஆகும்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் அடம்பையில் பெட்டிக்கடை நடத்திவரும் பக்ரூத்தின் (வயது31), புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த முகமது ரபீக் (53) என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    இதே போல் ஓசூர் நேதாஜி ரோடு ஜங்ஷனில் நாராயண சாத்ரா (42) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டவுன் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி ரூ.8,791 மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து நாராயண சாத்ராவை கைது செய்தனர்.

    ×