என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மின்சார கம்பியில் ஜெயபிரகாஷ் சாகுல் கை பட்டுவிட்டது.
    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் சாகுல் (வயது21).

    இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் உள்ள பாஞ்சாலிநகர் பகுதியில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    ஓட்டலில் சுத்தப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் ஜெயபிரகாஷ் சாகுல் கை பட்டுவிட்டது.

    இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • கடன் தொல்லையில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபதி (வயது36). இவர் ஓசூர் கிரீமிலே அவுட் பகுதியில் தங்கி கிரில் வேலைகளை ஒப்பந்தத்துக்கு எடுத்து செய்து வந்தார்.

    அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்த பூபதி மனமுடைந்து நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாவியை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணி சாமியிடம் வழங்கினார்.
    • ஐ.வி.டி.பி நிறுவனம், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளுக்காக இதுவரை ரூ.50 லட்சம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தொழுநோய் கண்டறிதல், தொழுநோய் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தடுப்புப் பணிகளில் மும்பையை சார்ந்த அலர்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளை திறம்பட செய்ய ஏதுவாக ரூ.14.2 லட்சம் மதிப்பிலான வாகனத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது.

    அந்த வாகனத்தின் சாவியை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணி சாமியிடம் வழங்கினார்.

    வாகனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஐ.வி.டி.பி நிர்வாகிகள் ஜோஸ்வா சைமன் மற்றும் நந்தினி எஸ்தர், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஐ.வி.டி.பி நிறுவனம், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளுக்காக இதுவரை ரூ.50 லட்சம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
    • அரசாணை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், காலை சிற்றுண்டியை சத்துணவு அமைப்பாளர்களே வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்னி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் மணி, மாநில பட்டுவளர்ச்சி சங்க பொருளாளர் கல்யாண சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுரை ஆற்றினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். மேலும் காலைச் சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களே வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நாளை வெள்ளிக்கி ழமை (12-ந் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும்,

    மாதத்தின் 2 மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை (12-ந் தேதி) காலை 10 மணி அளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுங்கள் என்று ஆசிரியர் கூறியுள்ளார்.
    • ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அருகேயுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.

    இந்த நிலையில், பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்களிடம் இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதேபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் நடந்து செல்லும்போது, அவர்களை ஆபாசமாக சித்தரித்து, சக மாணவர்களிடம் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஒருவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டுள்ளார்.

    அதன்பேரில் இன்று காலை பள்ளிக்கு சென்ற பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் 10-ம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து குறிப்பிட்ட ஆசிரியர் முன்னிலையில் விசாரித்தனர்.

    ஆசிரியர் நடந்துகொண்ட விதம் உண்மை என்று தெரிந்ததையடுத்து காவல் நிலையம், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் அளிக்கக்கூறி தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் பெரியதாக செல்வதை அறிந்த சில்மிஷ ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து ஒன்று கூடி பேசிய ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி மாணவிகளின் நலன் கருதி, நாளை முதல் இப்பள்ளியில் அந்த ஆசிரியர் பணி செய்யக்கூடாது என்றும், பணி ஓய்வு பெறும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கூறி விட்டு சென்று விட்டனர். இதற்கு அந்த ஆசிரியரும் ஒப்புக்கொண்டார்.

    இச்சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • இலங்கை பற்றி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது.
    • சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களே புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது.

    அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசி வருகிறார்.

    கிருஷ்ணகிரியில் பேசிய அவர் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்கிறார். ஒற்றை தலைமை வேண்டும் என பன்னீர்செல்வம் கூறவில்லை. 10 முறை பொது பட்ஜெட் வாசித்தவர். 3 முறை முதல்வர் பதவியில் இருந்தவர் மீது அநாகரிகமாக பேசி வருகிறார்.

    இலங்கை பற்றி பேசுகிறார். அவருக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது. இரட்டை இலை விவகாரத்தில் பணம் கொடுத்தது யார்?

    கிருஷ்ணகிரியில் பல கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வந்து சேரவில்லை. இது குறித்து பேசி இருக்கலாம். அதை விடுத்து சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.

    பொதுநலமாக பேசி வரும் பன்னீர்செல்வம் இவரது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை.

    பொது செயலாளர் யார் என மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.அப்போது தெரியும். பன்னீர்செல்வம் அலை வீசுவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    பன்னீர்செல்வம் இன்னும் தன் கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்.

    பின்னர் மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் மாநாடு போல மாவட்டம் தோறும்கூட்டங்களை பன்னீர்செல்வம் நடத்துவார். சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. காலம் தான் பதில் சொல்லும்.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்.

    • இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
    • நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள எரப்பநாயக்கனூர் கிராமத்தில் மொகரம் பண்டி கையையொட்டி இஸ்லாமிய மக்களின் முதல் மாத புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

    அதன் அடிப்படையில் மொகரம் தொடங்கி 10 நாட்களுக்கு விரதம் இருந்து பத்தாவது நாளில் துக்கம் அனுசரிக்கும் விதமாக விரதமிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    தொடர்ந்து நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை அனைத்து மக்களுக்கும் சமப்பந்தி விருந்து வைத்தனர்.

    • மானாவாரி பயிராக பயன்படுவதுடன் மண் அரிமானத்தையும் தடுக்கிறது.
    • நிலக்கடலை புண்ணாக்கு கால்நடை உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டாரம், ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூர் கிராமத்தில், நிலக்கடலை விதைப்பண்ணையை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அருணன் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நிலக்கடலையானது 100 முதல் 130 நாட்கள் வரை வளரக் கூடிய எண்ணெய் வித்துப்பயிராகும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையும் இருப்பதால் மானாவாரி பயிராக பயன்படுவதுடன் மண் அரிமானத்தையும் தடுக்கிறது. இப்பயிரானது வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தினை மண்ணிற்கு கிரகிக்கும் தன்மையுடையதால் மண்வளத்தையும் பெருக்குகிறது.

    மேலும் இதன் தண்டுப்பகுதி கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுவதுடன், நிலக்கடலை புண்ணாக்கு கால்நடை உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.

    நிலக்கடலை எண்ணெய் சமையலுக்கு பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. நிலக்கடலையானது முக்கியமான எண்ணெய் வித்துப்பயிராக உள்ளதால் அதன் விதைத்தேவையை பூர்த்தி செய்வது அவசியமாகிறது.

    வேளாண்மை துறை மூலம் விதைப்பண்ணைகள் அமைத்து மாவட்டத்தின் நிலக்கடலை விதைத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரணி, கதிரி கே-1812, கே-9,வி.ஆர்.ஐ.-8, ஆகிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகிறது.

    விதைப்பண்ணை அமைப்பதனால் அதிக மகசூல் பெறுவதுடன், சந்தைவிலையைவிட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்வதால் அதிக லாபமும், ஊக்க தொகையும் கிடைக்கிறது.

    எனவே விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஓசூர் விதைச்சான்று அலுவலர் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கெலமங்கலம் வட்டார உதவி விதை அலுவலர் கணபதி செய்திருந்தாார்.

    • விவசாயிகளிடம் இருந்து 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 160 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
    • விலை குறைந்து வருவதால் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி பிரதானமாக நடந்து வருகிறது. ராயக்கோட்டையில் உள்ள மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கிருந்து தான் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு இறுதியில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது.

    இந்நிலையில் தற்போது தக்காளி விலை குறைந்து வருகிறது. ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் கடந்த 7-ம் தேதி விவசாயிகளிடம் இருந்து 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 160 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

    நேற்று முன்தினம் அதன் விலை சரிவை சந்தித்து 130 ரூபாய்க்கும், நேற்று 120 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டது.

    விலை குறைந்து வருவதால் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பறிப்பு கூலி கூட கிடைக்காது என்பதால் பலர் தக்காளியை பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக தக்காளி தரமானதாக சாகுபடியாகுவதில்லை. அதை காரணமாக காட்டி விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு தக்காளி வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • மாநகர செயலாளர் பதவி மற்றும் நிர்வாகி களுக்கான வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தேர்தல் அதிகாரியும், மாநில விவசாய அணி துணை அமைப்பாளரு மான அன்னியூர் சிவா, விருப்பமனுக்களை வழங்கினார்.

    ஓசூர்,

    தி.மு.க. உட்கட்சி தேர்தலையொட்டி, ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில், 4 பகுதிகளாக பிரித்து அண்மையில் பகுதி செயலாளர்கள் தேர்தல் முடிவ டைந்தது.

    இதனைத் தொடர்ந்து மாநகர செயலாளர் பதவி மற்றும் நிர்வாகி களுக்கான வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று தளி சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சி க்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    தேர்தல் அதிகாரியும், மாநில விவசாய அணி துணை அமைப்பாளரு மான அன்னியூர் சிவா, விருப்பமனுக்களை வழங்கினார்.

    இதில், கட்சியின் ஓசூர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓசூர் மாநகர தி.மு.க. பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    அப்போது, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், துணைமேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் எம்.கே.வெங்கடேஷ், எம்.ராமு, திம்மராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    அவரை தவிர்த்து வேறு யாரும் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிடாத நிலையில், சத்யா மாநகர செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

    • மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் 80 ஆண்டு பழமையான ஸ்ரீமகா முனியப்பன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான கோழி, ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    செவ்வாய்கிழமை அதிகாலை ஸ்ரீ விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இவ்விழா கோவில் தர்மகர்த்தா சிவசக்தி சண்முகம், கொங்கு அறக்கட்டளை தலைவர், கொங்கு அறக்கட்டளை செயலாளர், பொருளாளர் கொங்கு இளைஞரணி தலைவர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொங்கு இளைஞர்அணி மற்றும் ஸ்ரீமகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினர் செய்தி ருந்தனர். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலஅட்வின் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×