என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் புலி வேடமணிந்து இளைஞர்கள் நடனமாடிய காட்சி.
மத்தூர் அருகே மொகரம் பண்டிகையையொட்டி புலி வேடம் அணிந்து இளைஞர்கள் நடனம்
- இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
- நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள எரப்பநாயக்கனூர் கிராமத்தில் மொகரம் பண்டி கையையொட்டி இஸ்லாமிய மக்களின் முதல் மாத புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
அதன் அடிப்படையில் மொகரம் தொடங்கி 10 நாட்களுக்கு விரதம் இருந்து பத்தாவது நாளில் துக்கம் அனுசரிக்கும் விதமாக விரதமிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தொடர்ந்து நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகளை வாயில் கவ்வி தூக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை அனைத்து மக்களுக்கும் சமப்பந்தி விருந்து வைத்தனர்.
Next Story






