என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தருமபுரி அண்ணா நகரை சேர்ந்த விவேக் என்பவர் எனது மனைவியையும், மகளையும் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.
    • கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடலரசன். இவர் டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனது மனைவி தங்கமணி, மகன் வெற்றிவேல் ஆகியோரை காணவில்லை.

    அவர்கள் குறித்து விசாரித்தபோது தருமபுரி அண்ணா நகரை சேர்ந்த விவேக் என்பவர் எனது மனைவியையும், மகளையும் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட வாலிபரை கண்டுபிடித்து எனது மனைவி,மகனை மீட்டு தரவேண்டும். இவ்வாறு ஆடலரசன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகார் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சூளகிரி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி.
    • பணியை ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், வேப்பனஹள்ளி தொகுதிக்கு உள்பட்ட சின்னாறு கிராமத்தில் சுமார் ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வி ராஜாராம் தலைமையில் தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    பொன்னப்பா செட்டியார் வீடு முதல் ராமன்னா வீடு வரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், மாணிக்கம் செட்டியார் வீடு முதல் ராமசந்திரன் வீடு வரை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், சூளகிரி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பைப்லைன் என ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்னண், கவுன்சிலர் தமிழ்செல்வி ராஜாராம், பொறியாளர் சுமதி, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ஒப்பந்ததாரர் லோகேஷ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    • சாலையில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், 8 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வளைவில் திரும்ப முயலும் போது நேற்று கனரக வாகனம் சாலை ஒர கழிவு நீர் கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-பேரிகை-கும்பளம் செல்லும் சாலை வணிக வளாகங்கள், உருது பள்ளி ,ஆரம்ப பள்ளி, வட்டார மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியாகும்.

    இந்த சாலையில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், 8 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த சாலை கர்நாடகா, ஆந்திராவிற்கு செல்ல எளி தான சாலை என்பதால் கனரக வாகனங்கள் இந்த சிறிய சாலையில் செல்வதனால் முனியம்மா கோவில் வளைவில் திரும்ப முயலும் போது நேற்று கனரக வாகனங்கள் சாலை ஒர கழிவு நீர் கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.

    ஏற்கனவே பல கனரக வாகனங்கள் கழிவு நீர் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பயத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க இரும்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் சாலையை விரிவுபடுத்தி கழிவு நீர் கால்வாய் மேல் பரப்பில் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    • அறிவியல் துறை படிப்பதால் மாணவ, மாணவியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கலாம்.
    • காலத்திற்கு ஏற்ப புதிய மென்பொருள் வன்பொருள்களை கண்ட றிவதில் மாணவர்கள், மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் மாணவி ரோஜா வரவேற்புரையாற்றினார்.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் தன்னுடைய சிறப்புரையில் கணினி அறிவியல் துறை படிப்பதால் மாணவ, மாணவியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கலாம்.

    குறைவான நேரத்தில் நிறைய தரவுகளை சேமிக்கலாம். முக்கிய கோப்புகளை பாதுகாக்கலாம். காலத்திற்கு ஏற்ப புதிய மென்பொருள் வன்பொருள்களை கண்ட றிவதில் மாணவர்கள், மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் கணினி அறிவியல் துறை தலைவி முனைவர் ராஜலட்சுமி கணினித் துறையின் வளர்ச்சியின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவியர்கள் பெறலாம் என்றார்.

    இவ்விழாவில் கணினி அறிவியல் துறை பேராசிரியர் முருகதாஸ், வனிதா, செல்வகுமார், ஸ்டீபன் விக்டர் அந்தோணி, லட்சுமி, இலக்கியா, வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் முடிவில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

    • மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
    • போதை பழக்கம், தனிமனித பிரச்சினை அல்ல, அது சமுதாய பிரச்சினையாகும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்லூரி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்காந்தி தலைமையில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அமைச்சர் காந்தி நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. இந்த பழக்கத்தால், உடல்நலம் கெடுவது மட்டுமின்றி, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை மற்றும் மனக்கவலை ஏற்பட்டு நிம்மதி இழக்க நேரிடும்.

    வாழ்வில் விரக்தி ஏற்படும். போதை பழக்கம், தனிமனித பிரச்சினை அல்ல, அது சமுதாய பிரச்சினையாகும்.

    இதனால் குற்றங்கள் பெருகும் அபாயம் உண்டு. எனவே, இதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த கூட்டு நடவடிக்கை தேவை. மாணவர்கள், போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும், இணைந்து கூட்டு நடவடிக்கையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் போதை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்களை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

    ஓசூர் எம்.எல்ஏ.ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பேசினர். ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ.முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார், தி.மு.க. பகுதி செயலா ளர்கள்வெங்கடேஷ், ராமு, திம்மராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி தலைமையாசி ரியர்,மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் நன்றி கூறினார்.

    • கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.
    • மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். சவர தொழிலாளியான இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மோனிகா (வயது19). இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இலவசமாக தேசியக்கொடி வழங்கும் பணியை நேற்று நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    அதன் படி கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளில் உள்ள 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இலவசமாக தேசியக்கொடி வழங்கும் பணியை நேற்று நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட ஜக்கப்பன் நகர் ஆட்டோ ஸ்டாண்ட், அப்பகுதியி லுள்ள கடைகள், வீடுகள் தோறும் தேசியக்கொடியை அவர் வழங்கினார்.

    மேலும் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சிவகுமார், கவுன்சிலர்கள் சுனில்குமார், மதன்ராஜ், பிர்தோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் பற்றி உறுப்பினர்கள் பேசினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா, காஞ்சனா, பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி, மஞ்சுளா, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, ஹரிஷ், முனிராஜ், வரதன் சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்னண், சிவகுமார் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பேசினார்கள்.

    • ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைகளை நீட்டி போதை பொருளுக்கு எதிராக தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி பிரசாரத்தை ஏற்றுக் கொண்டனர்.
    • போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பர்கூர்மதியழகன்

    எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிரமிளா முன்னிலை வகித்தார்.

    இதில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து போதை பொருள் தடுப்பு உறுதிமொழியை படித்தார்.

    அதை பின்பற்றி மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைகளை நீட்டி போதை பொருளுக்கு எதிராக தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி பிரசாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து போதை பொருள் தடுப்பு அதன் தீமைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள், போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் பர்கூர் நகர செயலாளர் பாலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஸ்ரீ நகரை நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியில் மாணவிகள் கைத்தட்டி, மலர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ஓட்டப்பந்தயத்தில் மத்தூர் வாலிபர் தங்க பதக்கம் வென்றார்.

    கிருஷ்ணகிரி,

    நேபாள நாட்டில் யூத் அண்டு ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் அசோசியேசன் ஆப் இந்திய அமைப்பு மூலம், இந்தியா நேபால் நாட்டு அணிகளுக்கு இடையே தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    இதில் இந்திய கோ-கோ அணிக்காக கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடந்தது.

    தேசிய அளவிலான இந்த போட்டியில் 26:2 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணிக்காக விளையாடிய கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவியர் மற்றும் அணியை வழி நடத்திய உடற்கல்வி ஆசிரியருக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவாப் தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

    இந்த நிழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆகியோர் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிகள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கம் ஆகியோருக்கு மாலை அணிவித்து, வெற்றி கோப்பைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட கல்வி ஆய்வாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுவேதாராணி விஜயராம், நகர்மன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சீனிவாசன், சுரேஷ்குமார், சுனில்குமார், முகமதுஆசிப், மதன்குமார் மற்றும் திருமலைச்செல்வன், கோபிநாத், கிருஷ்ணன், வேலு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மகாலட்சுமி, திவ்யலட்சுமி, அசீனாபேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டி னர். முன்னதாக மேளதாளங்க ளுடன் ஊர்வலமாக வந்த மாணவிகளுக்கு பள்ளியில் மாணவிகள் கைத்தட்டி, மலர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல மத்தூர் அருகேயுள்ள கரிங்காலிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 4.37 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தக்காளி பழங்களை தோட்டத்தில் பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
    • தக்காளி செடிகளும், பழங்களும் கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் சூளகிரி சுற்றுவட்டார விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த நிைலயில் பலர் தக்காளி பழங்களை தோட்டத்தில் பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

    இதனால் தக்காளி செடிகளும், பழங்களும் கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகிறது. தக்காளி மார்க்கெட்டில் இருப்பு வைக்க முடியாமல் தக்காளியை சாலை ஒரமாக கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. 

    ×