என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவனுடன் பெண்ணை கடத்திய வாலிபர்"
- தருமபுரி அண்ணா நகரை சேர்ந்த விவேக் என்பவர் எனது மனைவியையும், மகளையும் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.
- கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடலரசன். இவர் டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனது மனைவி தங்கமணி, மகன் வெற்றிவேல் ஆகியோரை காணவில்லை.
அவர்கள் குறித்து விசாரித்தபோது தருமபுரி அண்ணா நகரை சேர்ந்த விவேக் என்பவர் எனது மனைவியையும், மகளையும் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட வாலிபரை கண்டுபிடித்து எனது மனைவி,மகனை மீட்டு தரவேண்டும். இவ்வாறு ஆடலரசன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






