என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நாகக்கன்னி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
    • பாரத கோவிலில் இருந்து மங்கள வாத்தியம் பம்பை இசை முழங்க பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கணேஷ் நகர் ஸ்ரீ அரசமரத்து மகாமாரியம்மன் கோவில் 20- ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கடந்த 9-தேதி கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு விரத காப்பு கட்டுதல், பால்குடம் எடுக்கும் சுமங்கலி பெண்களுக்கு விரத காப்பு கட்டுதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஆலயத்தில் உள்ள முத்தாரம்மன், பிரித்தியங்கரா தேவி, ஸ்ரீ வராகி அம்மன், நாகராஜன், நாகக்கன்னி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    பாரத கோயிலில் இருந்து மங்கள வாத்தியம் பம்பை இசை முழங்க பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு பால் அபிஷேகம், செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டத. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பர்கூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், நேற்று தொடங்கியது.
    • கலச ஸ்தாபனம்,கலச பூஜை மற்றும், மகா தீபாராதனை நடைபெற்றது.

    ஓசூர்,

    ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில்,,உலக நலனுக்காக 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், நேற்று தொடங்கியது.

    3 நாள் நிகழ்ச்சியான இதில், முதல்நாள் நிகழ்ச்சி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹுதி,நீர்க்குடம் புறப்படுதல்,வாஸ்துசாந்தி,அங்குரார்ப்பணம்,வாஸ்து ஹோமம், கலச ஸ்தாபனம்,கலச பூஜை மற்றும், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை), காலை கலச பூஜை,ருத்ர ஹோமம், முதற்கால மகாநவ சண்டியாகத்தை தொடர்ந்துமகா பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயத்தின் பங்கா? தொழில்துறையின் பங்கா? என்ற தலைப்பில் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது.
    • சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் 75- ஆவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். தமிழ் துறையின் தலைவர் லட்சுமி வரவேற்புறை ஆற்றினார்.

    விழாவையொட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயத்தின் பங்கா? தொழில்துறையின் பங்கா? என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் நடுவராகவும் பேராசிரியர்கள், மாணவர்களைக் கொண்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

    கலை நிகழ்ச்சிகளாக மேலும்,சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சுதந்திர தினத்தை யொட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், கணினி துறைத்தலைவர் சாந்தி ஜெஸ்லெட் நன்றி கூறினார்.

    • அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மரபாகும்.

    எதிர்வரும் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளிலும், தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலிலும் ஈடுபடக் கூடாது.

    அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

    இது குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1077 அல்லது உதவி இயக்குநர் கைப்பேசி எண் 7402607002 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • மோசடி செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு குழு தலைவர் எம்.அசோகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, மாநகர பகுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில், மோசடி செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஓசூர் பஸ் நிலையம் எதிரே ஆனந்தபவன் ஓட்டல் அருகிலிருந்து ஜி.ஆர்.டி.சர்க்கிள் வரை ரூ.50 லட்சம் மதிப்பில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நகரமைப்பு குழு தலைவர் பேசுகையில், ஓசூரில், பாகலூர் கோடு போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பெங்களூரு-கிருஷ்ணகிரி மேம்பாலத்துடன் இணைக்க வேண்டும்.

    மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வழிவகை செய்ய வேண்டும். நகருக்கு மத்தியில் நெரிசலான பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை நகரின் வெளிப்புறத்தில் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மாநகராட்சிக்குட்பட்ட ஏரிகளை சுத்தம் செய்து, அந்த பகுதிகளில் சிறுவர் பூங்கா அமைத்திட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பதற்கு முன்பாக, நகரமைப்புக்குழு ஆய்வு செய்த பின்னர் வரிவிதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, நகரமைப்புக்குழு சார்பில், மேயரிடம் மனு வழங்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில், எஸ்.நாராயணன், குபேரன் என்ற சங்கர், புஷ்பா ஹரி உள்ளிட்ட நகரமைப்பு குழு உறுப்பினர்கள், முதுநிலை நகரமைப்பு அலுவலர் மாறன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே நடன நிகழ்ச்சியுடன் செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தபால் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மத்தூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மழை நீர் சேகரிப்பு பேரணி கண்ணன்டஹள்ளி பரணி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியை ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை வகித்து தொடக்கிவைத்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே நடன நிகழ்ச்சியுடன் செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இவ்விழிப்புணர்வு பேரணி மத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி பிரதான சாலை வழியாக சென்று தபால் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மத்தூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தன.

    பேரணியில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, (வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கிராம ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், பரணிப் பள்ளியின் தாளாளர் சேகர், மாவட்ட குழு உறுப்பினர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கண்ணன்டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், அரிமா சங்கர் தலைவர் கவுதமன், கண்ணன்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் புகழேந்தி, அரிமா தனசேகரன், சரவணா ஸ்டோர் உரிமையாளர் அரிமா சரவணன், ஊராட்சி செயலர் வெங்கடேசன், மக்கள் நலப்பணியாளர் ராஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் 16-ந் தேதி மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சூளகிரி நகர், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்தி ராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சி குப்பம், செம்பரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ர ண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகர சனப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய மின் டிரான்ஸ்பார்மரை மின்சார துறையினர் மாற்றினர்.
    • பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் முதல்- அமைச்சருக்கும், நகர்மன்ற உறுப்பினருக்கும், மின்சார துறையினருக்கும் நன்றி கூறினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததன் பேரில் கிருஷ்ணகிரி நகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் தெருவில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த மின் டிரான்ஸ்பார்மரை மாற்ற நகர் மன்ற உறுப்பினர் யாஸ்மின் அஸ்லம் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலினா சகாய மேரி உத்தரவின் பேரில் புதிய மின் டிரான்ஸ்பார்மரை மின்சார துறையினர் மாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியின் போது மின்சார பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் ரீனா மற்றும் மின் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    இந்த பகுதி பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் முதல்- அமைச்சருக்கும், நகர்மன்ற உறுப்பினருக்கும், மின்சார துறையினருக்கும் நன்றி கூறினர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வண்டியை மறித்து நிறுத்தினர்.
    • 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தென்காசி மாவட்டம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானகுமார் (வயது 26). ஓசூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் வாகன பரிசோதனை ஓட்டுநராக உள்ளார். இவர் ஒரு வாகனத்தை பரிசோதனை செய்வதற்காக ஓட்டி சென்றார்.

    ஓசூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே அவர் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வண்டியை மறித்து நிறுத்தினர். சிவஞானகுமாரை கீழே இறக்கிய அந்த ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டினர்.

    ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று அவர் சொன்னதால் ஊருக்கு போன் மூலம் பேசி அவரது செல்போனுக்கு ரூ.10,000 பணம் போட்டுவிட சொல்லியுள்ளனர். அதன்படி சிவஞானகுமாரின் உறவினர் ரூ.10,000 அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து சிவஞானகுமாரை அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு அழைத்து சென்று அந்த கடையின் உரிமையாளரது எண்ணுக்கு ரூ.9ஆயிரத்து 200 பணத்தை ஜி -பே மூலம் அனுப்ப சொல்லி அந்த பணத்தை பெற்றுள்ளனர்.

    பின்னர் மதுக்கடைக்கு அழைத்து சென்று மீதம் உள்ள பணத்தில் மது அருந்திவிட்டு சிவஞானகுமாரை விட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் சிவஞானகுமார் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் விசாரனை நடத்திய போலீசார் செல்போன் பண பரிவர்த்தனை மூலம் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்த வருண் (வயது 21),மோனிஷ் (24), பூபதி,மாலிக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வருண்,மோனிஷ் இருவரையும் கைது செய்தனர்.

    • அந்த நிறுவனத்தில் சுமார் 60 முதல் 70 பேர் உறுப்பினர்களாக முதலீடு செய்து வந்தனர்.
    • பணம் கொடுத்த 9 பேரும் மிரட்டி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 39). இவரும், மேலும் சிலரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் பங்கு சந்தை வணிகம் செய்வதாகவும், தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு தகுந்தாற் போல வருகிற லாபத்துடன் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.

    அதை நம்பி நான் ரூ.30 லட்சமும், எனது நண்பர் சங்கர் ரூ.40 லட்சமும், பிரகாஷ் ரூ.30 லட்சமும், சீனிவாசன் ரூ.30 லட்சமும், ஞானசேகர் ரூ.30 லட்சமும் முதலீடு செய்தோம்.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சுமார் 60 முதல் 70 பேர் உறுப்பினர்களாக முதலீடு செய்து வந்தனர். அதே போல நாங்கள் முதலீடு செய்ததை நம்பி கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதன் உரிமையாளர் அருண்குமாரும் தலைமறைவாகி விட்டார். இதனால் எங்களை நம்பி பணம் கொடுத்த 9 பேரும் எங்களை பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள்.

    எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளதால் சான்றிதழ்களை தயார் செய்ய பணம் செலவாகும்.
    • கொஞ்சம்,கொஞ்சமாக ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சமீபத்தில் இவரது செல்போனுக்கு வந்த ஒரு தகவலில் வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், இதற்காக சான்றிதழ்களை தயார் செய்ய பணம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை நம்பிய சிவகுமார் அந்த தகவலை நம்பி கொஞ்சம்,கொஞ்சமாக ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் காலம் கடந்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற முதியவர் சின்னப்பராஜ் என்பவருக்கு மோசடியான தகவல்களை தெரிவித்து இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் அனுப்பி வைத்தால் பதிலுக்கு பல மடங்கு அமெரிக்க டாலராக அனுப்புவதாக ஏமாற்றியுள்ளனர். .இதைநம்பி அவரும் பணத்தை அனுப்பி வைத்து விட்டு ஏமாந்துள்ளார். இதுகுறித்து சின்னப்பராஜ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சாலிநாயனப்பள்ளி முனீஸ்வர சுவாமி கோவிலின் 34-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று சாமிக்கு அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள், ஆராதனை, பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெருக்கூத்து, சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. முனீஸ்வரர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாலிநாயன பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

    ×